“உங்க சி.எம் ஒரு சிங்கம்.. யாராலும் பணிய வைக்க முடியாது”.. கெஜ்ரிவாலுக்காக ரோட்டில் இறங்கிய சுனிதா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "உங்கள் முதலமைச்சர் சிங்கம், அவரை யாராலும் பணிய வைக்க முடியாது" என அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லியில் ரோடு ஷோவின் போது பேசியுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Sunita kejriwal speaks at lok sabha election campaign rally that Your CM is a singam

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். கடந்த மார்ச் 31ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் சுனிதா கெஜ்ரிவால் முதல் முறையாக பங்கேற்றிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் சுனிதா கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 27) டெல்லியில் பிரமாண்ட ரோட் ஷோவை சுனிதா கெஜ்ரிவால் நடத்தியுள்ளார். டெல்லி கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டார் சுனிதா கெஜ்ரிவால். இன்று (ஏப்ரல் 28) மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார் சுனிதா.

கிழக்கு டெல்லியில் நடந்த ரோடு ஷோவின்போது பேசிய சுனிதா கெஜ்ரிவால், "ஒரு மாதமாக, உங்கள் முதல்வரை, என் கணவரை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை எந்த நீதிமன்றமும் அவரை தண்டிக்கவில்லை. விசாரணை நடத்தப்படும் நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர். 10 ஆண்டுகள் விசாரணை நடந்தால், 10 ஆண்டுகள் சிறையில் அடைப்பார்களா?

முன்பு, நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த பிறகுதான் சிறையில் அடைப்பார்கள். ஆனால் இன்றைக்கு அவர்கள் ஒரு புதிய அமைப்பைக் கொண்டு வந்து விசாரணை முடியும் வரை அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இது ஒரு சர்வாதிகாரம். அரவிந்த் கெஜ்ரிவால் 22 வருடங்களாக நீரிழிவு நோயாளியாக இருந்து வருகிறார். 12 வருடங்களாக இன்சுலின் மருந்து எடுத்து வருகிறார்.

சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டுள்ளது. அவரது சர்க்கரை அளவு 300-ஐ தொட்டுள்ளது. இது அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல நினைக்கிறார்களா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள், அதுதான் அவர்களின் பிரச்சனை என்று எனக்குத் தெரியும்.

கெஜ்ரிவால் செய்த தவறு என்ன? கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உங்களடைய முதல்வர் சிங்கம். அவரை யாராலும் உடைந்து போகச் செய்யவோ, பணிய வைக்கவோ முடியாது. அவர் யாருக்கும் தலைகுனிய மாட்டார். நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்." எனப் பேசியுள்ளார் சுனிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+