தலைமை நீதிபதி மீது பொய் பாலியல் புகாரா? நாளை விளக்கம் அளிக்க வழக்கறிஞருக்கு உத்தரவு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தப்படுவதாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்த வழக்கறிஞர் நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தப்படுவதாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்த வழக்கறிஞர் நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் நாளை இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர்.

22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ''இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னிலிருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். '' என்று குறிப்பிட்டார்.

அடுத்த பரபரப்பு

அடுத்த பரபரப்பு

இதையடுத்து திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் பேட்டி அளித்து இருக்கிறார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

கூறியது என்ன

கூறியது என்ன

அவர் தனது பேட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் என்னை ஒருவர் வந்து சந்தித்தார். அவர் என்னிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து தலைமை நீதிபதி மீது பொய்யான பாலியல் புகார் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் ரூ.1.5 கோடி கொடுப்போம். ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஏற்றுக்கொள்ளப்பட்டது

இது தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணபத்திரமும் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கறிஞர் உட்சவ் அளித்த பிரமாணப்பத்திரம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணையை தொடங்க இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் வழக்கறிஞர் உட்சவ்விற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்ன உத்தரவு

என்ன உத்தரவு

அதன்படி நாளை வழக்கறிஞர் உட்சவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக செய்யப்பட்ட சதி புகார் குறித்து இவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+