எந்த மதமும் மாசு ஏற்படுத்த சொல்லவில்லை.. நாடு முழுக்க ஏன் பட்டாசு தடை இல்லை? சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காற்று மாசு ஆண்டு முழுக்க இருக்கும் போது ஏன் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நாடு தழுவிய அளவில் பட்டாசுகளுக்கு ஏன் தடை இல்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தையே தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்: இதற்கிடையே பட்டாசு தடை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு என்பது பெரிய பிரச்சினையாக இருக்கும் போது ஏன் குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பட்டாசுகளுக்கு நாடு தழுவிய தடை ஏன் இல்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "எந்தவொரு மதமும் மாசுவை உருவாக்கும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்பதே எங்கள் கருத்து. பட்டாசுகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கிறது" என்றனர். மேலும், தற்போதுள்ள தடையை அமல்படுத்தத் தவறியதற்காக டெல்லி அரசு மற்றும் போலீசாரை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர்
நிரந்தர தடை: மேலும் நீதிபதிகள், "பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்க அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்.. ஆண்டு முழுவதும் காற்று மாசு அதிகரிக்கும் போது சில மாதங்கள் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏன்" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், டெல்லியில் காற்று மாசு பண்டிகைக் காலங்களில் அதிகரிப்பதால் அந்த மாதங்களில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்படுவதாக விளக்கமளித்தனர். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிரந்தர தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டெல்லி அரசு போட்ட உத்தரவை ஆய்வு செய்தோம். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து இருக்கிறீர்கள்.. ஆனால் தேர்தல் மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி தந்துள்ளீர்கள்.. எதற்காக இதுபோன்ற விதிவிலக்கு? மேலும், பட்டாசு விற்பனைக்கும் போலீஸ் உரிமம் அளிக்கிறது. மாநிலத்தில் பட்டாசு வெடிக்க முழு தடை இருக்கும் போது இதுபோன்ற உரிமங்களை அனுமதிக்கக் கூடாது" என்றனர்.
உத்தரவு: மேலும், தடை உத்தரவு குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்கவும், பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி தடையை உறுதி செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், டெல்லியில் பட்டாசுகளுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்தும் பரிசீலனை செய்யுமாறு டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டது.
இறுதியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "பட்டாசுகளை வெடிப்பதில் தங்களின் அடிப்படை உரிமை என யாரேனும் உரிமை கோர விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும்! தீபாவளிக்கு மட்டுமின்றி, பட்டாசுகளுக்கு முழுமையாக எப்போதும் தடை விதிக்க வேண்டும்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்











Click it and Unblock the Notifications