Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவிற்கு 1 முறை வாக்களித்தால்.. 2 ஓட்டு விழுந்தது எப்படி? தேர்தல் ஆணையத்தை வளைத்த உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குபதிவில் பாஜகவிற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வாக்கு அளித்தால் இரண்டு வாக்குகள் பதிவானது குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளையும் VVPAT இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்படும் காகித ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 100% எல்லா வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்த்த பின்பே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

Supreme Court asks ECI to look into an allegation that during a mock poll of EVMs in Kerala

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வாதம் வைக்கும் போது ,‛தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் நாம் மீண்டும் காகித வாக்குச் சீட்டுக்கு செல்லலாம். அல்லது வாக்காளர்களுக்கு VVPAT ஒப்புகை சீட்டை வழங்குவது மற்றொரு முறை.

இல்லையெனில், நாம் வாக்களிக்கும் சின்னத்தின் சீட்டுகள் விவிபாட் இயந்திரத்தில் விழுந்து, அந்த சீட்டை வாக்காளரிடம் கொடுத்து வாக்குப் பெட்டியில் போட சொல்லலாம். அவர்கள் சரிபார்த்த பின் போடலாம். VVPAT வடிவமைப்பை மாற்றலாம். அது வெளிப்படையான கண்ணாடியாக இருக்க வேண்டும். தற்போது இருண்ட ஒளிபுகா கண்ணாடியாக உள்ளது, அங்கு ஒளி இரண்டு மூன்று வினாடிகள் ஒளிரும் போது நாம் என்ன சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பது தெரியும். அப்படி இல்லாமல் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஒப்புகை சீட்டாக நமக்கு வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். அதை பெட்டிக்குள் போடும் முறை கொண்டு வரலாம் என்று நேற்று வாதம் வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கேள்வி: இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குபதிவில் பாஜகவிற்கு ஒரு வாக்கு அளித்தால் இரண்டு வாக்குகள் பதிவானது குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று காசர்கோட்டில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின் போது குறைந்தது நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளைப் பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. காசர்கோடு மக்களவைத் தொகுதியின் எல்.டி.எஃப் வேட்பாளரும், சி.பி.எம் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் இன்பசேகரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இந்த 4 எந்திரங்களில் 1 முறை பாஜகவிற்கு வாக்களித்தால் இரண்டு முறை வாக்குகள் பதிவாகி உள்ளது. இது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குபதிவில் பாஜகவிற்கு ஒரு வாக்கு அளித்தால் இரண்டு வாக்குகள் பதிவானது எப்படி? இப்படி வாக்குகள் மாறி பதிவாக என்ன காரணம்? என்பது குறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு பின்னணி: நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

VVPAT என்பது வாக்காளர் தாங்கள் அளித்த வாக்குகளை சரிபார்க்க உருவாக்கப்பட்ட தணிக்கைத் இயந்திரம் ஆகும். தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்குச் அளிக்கப்பட்ட வாக்குகள் சரியாக சென்றதா என்பதைப் பார்க்க உருவாக்கப்பட்டது. VVPAT ஆனது சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டிருக்கும் காகிதச் சீட்டை கொண்டு இருக்கும். தேர்தல் முடிவுகளில் சர்ச்சை ஏற்பட்டால் மட்டுமே இதை திறக்க முடியும்.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளையும் VVPAT இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்படும் காகித ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கக் கோரிய மனு உள்ளது. 100% எல்லா வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்த்த பின்பே முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் ஆர்வலர் அருண்குமார் அகர்வால், மற்றும் சிலர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+