காஷ்மீரில் 4ஜி சேவை.. ஆய்வு செய்து முடிவு எடுக்க சிறப்பு கமிட்டி..உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் 4 ஜி இணைய சேவையை மீண்டும் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது, ஆனால் மத்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தை சேர்ந்த செயலாளர்கள் அளவிலான குழுவை அமைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
"இந்த நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் இரண்டும் முக்கியம். இரண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறது. காஷ்மீர் நெருக்கடியில் உள்ளது என்பதை நாங்கள் ஏற்கிறோம். அதே நேரத்தில் நீதிமன்றம் தற்போதைய தொற்றுநோய் மற்றும் கஷ்டங்கள் தொடர்பான கவலைகளை அறிந்திருக்கிறது" என்று மனுவை விசாரித்த, நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

"மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகளின் சரியான தன்மையையும் மாற்றுத் தீர்வையும் ஆராய்வதற்கு சிறப்புக் குழு அறிவுறுத்தப்படுகிறது," என்று உச்சநீதிமன்றம் கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது.
தொற்றுநோய் பரவியுள்ள இந்த காலகட்டத்தில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தகம் / வணிகத்திற்கு 4 ஜி இணையதள வேகம் அவசியம் என்று கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இணைய வேகத்தை அதிகரிக்கக் கோரும் இந்த மனுவை மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் எதிர்த்தன. ஜம்மு-காஷ்மீருக்குள் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் எல்லையில் உள்ள அவர்களின் குழுக்கள் இணையத்தை பயன்படுத்தி, போலி செய்திகளை ஒளிபரப்புவதன் மூலம் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது அரசு தரப்பு கூறியிருந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications