“ஆளுநர்களிடம் நீதிபதிகள் கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை!” - உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுப்பது பற்றி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில், "மசோதாக்களை 6 மாதம் ஒரு வருடம் என நிறுத்தி வைத்திருப்பதை ஏற்க முடியாது. ஆளுநர்களிடம் நீதிபதிகள் கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை" என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட அனுமதியில்லை என்று மத்திய அரசின் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பான வாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications