ஒட்டு உறவு கிடையாது.. சரத் பவார் படத்தை பயன்படுத்தாதீங்க! அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தேசியவாத காங்கிரஸிலிருந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவின் ஷிண்டே-பாஜக தலைமையிலான அணிக்கு அஜித் பவார் ஆதரவளித்தார். இதனையடுத்து கட்சி இரண்டாக பிரிந்தது. அஜித் பவார் துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அதேபோல அவருடன் சென்ற எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

இருப்பினும், தேசியவாத காங்கிரசுக்கு யார் சொந்தக்காரர்? என்று கேள்வி எழுந்தது. இதற்கிடையில் அஜித் பவாரின் அணியை தேசியவாத காங்கிரசாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த அணிக்கு, தேசியவாத காங்கிரஸின் கடிகாரம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணி உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் , கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சரத் பவார் குழுவின் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேசியவாத காங்கிரஸின் கடிகாரம் சின்னம் மற்றம் சரத் பவாரின் படத்தை அஜித் பவார் அணியினர் பயன்படுத்துவதாக ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனையடுத்து, சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். அப்போது குறிக்கிட்ட அஜித் பவார் குழுவின் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் மனிந்தர் சிங், "கட்சி இதை வேண்டுமென்றே செய்யவில்லை. உறுப்பினர்கள் யாரேனும் செய்திருப்பார்கள். எல்லா சோஷியல் மீடியா போஸ்ட்களையும் கட்சி எப்படி கட்டுப்படுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், கட்சி தங்கள் தொண்டர்களை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கறாராக கூறியது.
மேலும், "நீங்கள்தான் பிரிந்து வந்துவிட்டீர்களே, அப்புறம் என்ன? உங்கள் சொந்த அடையாளங்களை கொண்டு தேர்தல்களை எதிர்கொள்ளுங்கள்" என்று நீதிபதிகள் கூறினர். அதேபோல ஏற்கெனவே சரத் பவாரிடம் உள்ள கடிகார சின்னத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சரத் பவார் பெயர், படத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என திங்கள்கிழமைக்குள் உறுதிமொழி தரவும் உத்தரவிட்டனர். மேலும் கடிகார சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications