Prathyusha: 23 ஆண்டு மர்மம் விலகுகிறதா? நடிகை பிரதியுஷா கொலையா? தீர்ப்பளிக்கும் உச்சநீதிமன்றம்!
டெல்லி: நடிகை பிரதியுஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் அந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் முடிவடைந்து விரைவில் தீர்ப்பளிக்கப்படுகிறது. இதன் மூலம் 23 ஆண்டுகளாக இருந்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறைக்கு வந்து சில படங்களிலேயே பெயரையும் புகழையும் சம்பாதித்து பிஸியாக இருந்த நடிகைகள் திடீரென படங்களே இல்லாமல் திருமணம் செய்து கொண்டு போய்விடுவார்கள்.
ஆனால் இன்னும் சில நடிகைகள் பெயர், புகழ், படங்கள் என கிடைத்தாலும் காதல் வலையில் விழுந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் சூழலுக்கு சென்றுவிடுகிறார்கள். இதில் நடிகைகள் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, மோனல், பிரதியுஷா உள்ளிட்டோர் ஆவர்.
இவர்களில் பிரபல நடிகை பிரதியுஷா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ஒரு ரியாலிட்டி ஷோவில் இவர் கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. 1988 ஆம் ஆண்டு தெலுங்கில் மோகன்பாபுவின் படத்தில் இவர் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனுநீதி என்ற படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து சூப்பர் குடும்பம், தவசி, கடல் பூக்கள், பொன்னான நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 20 வயதில் பிஸியான நடிகையான பிரதியுஷா, 5 ஆண்டுகளில் 11 படங்களில் நடித்திருந்தார்.
பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்டியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலுத்து சித்தார்த் ரெட்டியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் 2002 ஆம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை இருவரும் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் சித்தார்த் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதியுஷா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதை 2 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதியுஷாவின் தாய். கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தொடுத்த வழக்கில், "என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது இறப்பு திட்டமிடப்பட்ட ஒரு கொலை" என வாதிட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். எனவே கடந்த 23 ஆண்டுகளாக பிரதியுஷா இறப்பில் நீடித்து வரும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என தெரிகிறது. பிரதியுஷா ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications