போராட்டத்தை கட்டுப்படுத்த.. பவர் வேணுமாம்! டெல்லி போலீஸை தலையில் கொட்டி அனுப்பிய நீதிமன்றம்!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை டெல்லியில் பெரிய போராட்டத்தை நடத்த காக்ரோச் ஜனதா கட்சி(CJP), இடதுசாரி மாணவர் அமைப்புகள் திட்டமிட்டிருக்கின்றன. இந்நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீசுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூலை மாதம், மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். அது தொடர்பாக பதியப்பட்ட FIR-ஐ விசாரிப்பது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கையாளுவதில் டெல்லி போலீசுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, "போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் வயது மாணவர்கள் என்பதால், நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்ட சிக்கல்ககளால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதில் நீதிமன்றம் கவனமாக உள்ளது" என்று கூறினர்.
இது குறித்து தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், "இவர்கள் நம் முன்னே இருக்கும் இளம் மாணவர்கள் மற்றும் போராளிகள். நாம் அவர்களின் பெற்றோர்களையும் கவனித்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீண்ட வாழ்க்கை உள்ளது. அவர்கள் நீதிமன்ற விசாரணைகளில் தேவையின்றி சிக்கிக்கொள்ளக்கூடாது" என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் CJP நடத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி போராட்த்தின்போது வன்முறை வெடித்ததாக கூறி மாணவர்களின் மீது டெல்லி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி உச்சநீதிமன்றம், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142 எனும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த FIRகளை ரத்து செய்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு, பழைய FIRகளை மீண்டும் தூசி தட்டி விசாரிக்க வழிவகுக்கும் என்பதால், அனுமதி கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால்.. மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது. அதற்கேற்ப அக்.10ம் தேதி, அதாவது நாளை டெல்லியில் CJP போராட்டத்திற்கு CJP, SFI, DYFI, AISA உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
