விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு டிஸ்மிஸ்! சுப்ரீம் கோர்ட் சொன்ன முக்கிய பாயிண்ட்
வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
டெல்லி: வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சமீபத்தில் 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
அதேபோல வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

கூடுதல் நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இவர்களுக்கு விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த 5 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை ஐகோர்டடில் இருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் நீதிபதிகள் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கு
இதன் மூலம் சென்னை ஐகோர்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி 18ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இதில் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் பல மூத்த வழக்கறிஞர்கள் எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாகப் பல மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தனர்.. இது மட்டுமின்றி விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

ஒரே ஒரு முறை
இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், வழக்கு விசாரணை நடக்கிறது. முதலில் இந்த வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின் இது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.. இன்று காலை
விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தாங்களும் மாணவராக இருந்த போது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்றும் தெரிவித்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்று விசாரணை
1992இல் நடந்த இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டே வழக்கறிஞர் எல் விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை விக்டோரியா கவுரி பேசியுள்ளதாகவும் இதன் காரணமாக அவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

பரபர வாதம்
முதலில் இந்த வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்த நிலையில், பின் இது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.. காலை 10.30 மணிக்கு விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தாங்களும் மாணவராக இருந்த போது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாகப் பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கருத்து
இந்த மனுவுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்வதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கண்ணா, "தகுதிக்கும் பொருத்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது.. தகுதி குறித்து ஒருவர் மனு தாக்கல் செய்யலாம். ஆனால் பொருத்தமான நபரா என்று கேள்வி எழுப்ப முடியாது.. அந்த கேள்வி எழுப்பப்பட்டால் முழு செயல்முறையும் குழப்பமாகிவிடும்" என்று தெரிவித்தார்.

முக்கிய பாயிண்ட்
அப்போது மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், உரியத் தகவல் கொலிஜியத்திற்கு அளிக்கப்படவில்லை என்றும் இதனால் முடிவெடுக்கும் செயல்முறை தடைப்பட்டதாக வாதிட்டார். இருப்பினும், தங்களுக்கு அளித்த அனைத்தையும் படித்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அரசியல் பின்னணியைப் பொறுத்தவரை தனக்கும் அரசியல் பின்னணி இருந்ததாகவும் இருப்பினும் அது தனது கடமைகளுக்குத் தடையாக இருந்தது இல்லை என்றும் நீதிபதி கவாய் தெரிவித்தார்.

தள்ளுபடி
அப்போது வழக்கறிஞர் ராமச்சந்திரன், "இது அரசியல் பின்புலம் பற்றியது இல்லை.. இது வெறுப்பு பேச்சு தொடர்பானது.. வெறுப்பு பேச்சு என்பது அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. இது அவரை தகுதியற்றவராக மாற்றுகிறது" என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், "தகுதி குறித்து எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். கொலீஜியத்திற்கு எங்களால் எதுவும் கூற முடியாது.. கொலீஜியம் இந்த விஷயங்களைக் கணக்கில் கொண்டிருக்காது என்று கருத முடியாது" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications