டெண்டர் முறைகேடு: எடப்பாடி 'ஹேப்பி அண்ணாச்சி'- திமுக அரசின் அப்பீல் மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்!
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறையில் ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
அதிமுகவின் 2016-2021 ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகா வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியால் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கில் 2018-ல் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்சநீதிமன்றம் போனது. ஆனால் வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே வந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை 2018-ல் நடத்தப்பட்ட தொடக்க விசாரணையில் குறைகள் இல்லை. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றையே காரணமாக காட்டி புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதால் ஆர்.எஸ்.பாரதி மனு டிஸ்மிஸ் செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதனடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனவும் அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர். இதே வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications