மதுபான கொள்கை கேஸ்: சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஜாமீன் பெற்றார்! சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சியுமான கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. கவிதா படித்தவர், எம்.எல்.சியாக இருப்பவர் என்பதாலேயே ஜாமீன் தர டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது தவறானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை பெரும் சர்ச்சையானதால் அது திரும்பப் பெறப்பட்டது. இந்த மதுபான கொள்கை அறிவிப்பில் பெரும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 17 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலையானார். இதனால் கவிதாவுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று கவிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கை சிபிஐ நேர்மையாகத்தான் நடத்துகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கவிதா படித்தவர்; எம்.எல்.சி. என்ற காரணத்துக்காகவே அவருக்கு ஜாமீன் தர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது தவறானது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் இந்த வழக்கில் பிஆர்எஸ் எம்.எல்.சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications