காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 35ஏ சட்டம் நீக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Article 35A case | காஷ்மீர் சிறப்பு சட்டம் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

    இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலம் ஆகும். இங்கு உள்ள 35ஏ சட்டப்பிரிவு அம்மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது. இந்தியாவில் பிற பகுதிகளில் இல்லாத சட்டங்களை அங்கு கொண்டு வர முடியும்.

    Supreme Court to hear Jammu Kashmirs Article 35A case today

    அதாவது இந்திய மத்திய அரசு அனுமதி இன்றி, லோக்சபா அனுமதி இன்றி எந்த ஒரு சட்டத்தையும் காஷ்மீர் அரசு உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சட்டங்கள் இந்தியாவின் பிறபகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மத்திய அரசால் அதை எதுவும் செய்ய முடியாது.

    உதாரணமாக இந்தியாவின் பிறபகுதி மக்கள் காஷ்மீரில் எப்போதுமே குடியேற முடியாது. அங்கு காஷ்மீர் மக்கள் மட்டுமே குடிமக்களாக இருக்க முடியும்.

    இது அரசியலமைப்புப்படி முறையாக கொண்டு வரப்பட்ட சட்டம் கிடையாது. 1954ல் குடியரசுத்தலைவர் பிரகடனம் மூலம் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். இதனால் இதற்கு எதிராக பலர் குரல் எழுப்பி வந்தனர்.

    பல காலமாக இதற்கு எதிராக பலர் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றில் இருந்து நடக்க இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இதன் மீதான விசாரணை இன்று காலை நடக்கிறது.

    இதனால் காஷ்மீரில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே காஷ்மீரில் புல்வாமா தாக்குதலால் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 10,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+