காஷ்மீர் 370-வது பிரிவு நீக்கம்: வழக்கு போட்டவர் நடவடிக்கையா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தது. அதேநேரத்தில் மத்திய அரசு தரப்பு நோக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இதனை மத்தியில் ஆளும் பாஜக அரசு 2019-ல் ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் தற்போது வரை சட்டசபை செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் கடந்த 10 நாட்களாக உச்சநீதிமன்றம் தொடர் விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நடத்தி வருகிறது. இன்று 11-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது, அரசியல் சாசனத்தின் முகப்புரையானது சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான்; மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே என மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். மேலும் 1964-ம் ஆண்டே ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்க கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாம வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது எனவும் துஷார் மேத்தா வாதிட்டார். தற்போது 370-வது ரத்துக்குப் பின்னர்தான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது; சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர் என்றார் துஷார் மேத்தா.
அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான்; அதை எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது எனவும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இந்த விசாரணையின் போது Zaroor Ahmed Bhat என்ற பேராசிரியர் மீது 370-வது பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications