Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்தாரே? சஸ்பெண்ட் ஏன்? மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.. எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராமின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் தனுஷின் சகோதரர் 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்றனர்.

ADGP Jayaram Supreme court

இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் தேடிய நிலையில் காரில் கடத்திச் சென்றவர்கள், சிறுவனை கீழே இறக்கி விட்டு தப்பினர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுவனை கடத்திய விவகாரத்தில் கே.வி.குப்பம் எம்.எல்.ஏவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பு உள்ளதாக அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு, ஜூன் 16 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பூவை ஜெகன் மூர்த்தியை கடுமையாக சாடினார் நீதிபதி வேல்முருகன். பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, போலீஸ் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டார் நீதிபதி வேல்முருகன்.

இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடத்தலுக்கு கார் கொடுத்து உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜெயராமை திருவலங்காடு போலீசார் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாலங்காடு டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கைது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வழக்கில் கைதானவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் ஏடிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியை கைது செய்துள்ளனர். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க பட்டியலிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவை இன்று (ஜூன் 18) விசாரிப்பதாக தெரிவித்தனர். அதன்படி இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.. பின்னர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+