முல்லைப் பெரியாறு அணை விவகாரம்.. கேரள ஒத்துழைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரளாவுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான, இறுதி விசாரணை இரண்டாவது நாளாக நேற்று (மார்ச் 24) நடைபெற்றது.
அப்போது, பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு, சாலை போடும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு மேற்பார்வைக் குழுவே தீர்வு காணும் எனவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என்றும், நீதிபதி கண்வில்கர் கண்டித்தார்.

அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே கூறுகையில், "2006ஆம் ஆண்டே அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பின்னர், அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் உத்தரவுகள் எதையும் கேரள அரசு பின்பற்றுவதில்லை" என்று தெரிவித்தார்.
மத்திய நீர் ஆணைய வழக்கறிஞரும் இதே வாதத்தை முன்வைத்தார். அப்போது மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத கேரள அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதே நிலை தொடர்ந்தால், கேரள தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் கேரளா முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இதில் கேரளா இடையூறு செய்தால் தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தனர்.
மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்கலாமா என்ற நீதிபதியின் கருத்துக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா என இரு மாநிலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தொடர்ந்து, இரு மாநிலங்களும் முல்லை பெரிய அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் MINUTES OF ORDER விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications