தேர்தல் பத்திரங்களை வெளியிடாமல் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க? ஈஸிதானே? எஸ்பிஐக்கு தலைமை நீதிபதி குட்டு
டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது, அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்க கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தேர்தல் பத்திரம் வழக்கு: நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.
எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் செயல்படும் முறை: கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது.
தீர்ப்பு: இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் விசாரித்து கடந்த நவம்பர் மாதம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில்தான் தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
உத்தரவு; தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இதுவரை கட்சிகள் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நிதிகளை பெற்றது என்ற விவரங்கள் மொத்தமாக வெளியே வரப்போகிறது.
அதன்படி எஸ்பிஐ வழியாக 2019 ஏப்ரல் 12 முதல் தேர்தல் பத்திரங்களை விற்றது யார், எந்த அரசியல் கட்சிக்காக வாங்கினார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மார்ச் 4 அன்று உச்ச நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது மார்ச் 6ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை ஜூன் 30, 2024 வரை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளது .
அவகாசம் கோரிக்கை; தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்க கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பினர். அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது, அதை வெளியிட எஸ்பிஐ ஏன் கால அவகாசம் கேட்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர். நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. எல்லாம் ஒரே இடத்தில் தானே இருக்கிறது. தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மிக எளிமையான ஒரு உத்தரவை தான் எஸ்பிஐ வங்கிக்கு கொடுத்தோம் அதனை பின்பற்றுவதற்கு கால அவகாசம் கோருவது ஏன்? தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
அதை எளிதாக எடுக்க முடியுமே. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது.. எங்களுக்கு புரியவில்லை.. உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை
எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். சரியாக அவகாசம் முடியும் 2 நாட்களுக்கு முன் வீம்பிற்கு புதிய மனு தாக்கல் செய்தது ஏன் ?, என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications