"SIR பணிகளுக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது!" திட்டவட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்! முக்கியமான பாயிண்டு
டெல்லி: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு எந்தவொரு மாநில அரசும் தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.. மேலும், மேற்கு வங்க எஸ்ஐஆர் பணிகள் பிப்ரவரி 14ம் தேதியோடு முடியவிருந்த நிலையில், கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம் அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் இப்போது பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக அம்மாநில அரசு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தடங்களை அனுமதிக்க முடியாது
இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பன்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது. வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், "தேவையான உத்தரவுகள் அல்லது விளக்கங்களை நாங்கள் வெளியிடுவோம். ஆனால் SIR செயல்முறைக்கு எந்தத் தடங்கலையும் அனுமதிக்க மாட்டோம். இதை அனைத்து மாநிலங்களும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிதான் இந்த வழக்கின் மையமாக உள்ளது. மம்தா பானர்ஜி இந்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஆயிரக்கணக்கான மைக்ரோ பார்வையாளர்களின் நியமனம் குறித்தும் கேள்வி எழுப்பி, நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தேர்தல் ஆணையம்
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியதுடன், மாநில அரசு முழுமையாக ஒத்துழைக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியது. அதாவது எஸ்ஐஆர் பணிகளுக்கு க்ரூப் பி அதிகாரிகளை அனுப்ப மேற்கு வங்க அரசு தவறிவிட்டதாகவும் இதன் காரணமாகவை மைக்ரோ பார்வையாளர்களை நியமிக்க வேண்டி இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மம்தாவிடம் கேள்வி
அப்போது மேற்கு வங்க அரசு தரப்பை நோக்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், "மைக்ரோ பார்வையாளர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட வேண்டிய 8,000க்கும் மேற்பட்ட க்ரூப் பி அதிகாரிகளின் பெயர்களை அனுப்புவதில் ஏன் தாமதம்? பிப்ரவரி 4 ஆம் தேதி நாங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியபோதும், பிப்ரவரி 7 நள்ளிரவு 12 மணிக்குத் தான் நீங்கள் மின்னஞ்சல் மூலம் பெயர்களை அனுப்புகிறீர்கள்? ஏன் இவ்வளவு தாமதம்" என்று நேரடியாக மம்தாவை பார்த்து கேள்வி எழுப்பினார்.
தங்களுக்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு ஐந்து கடிதங்கள் எழுதியதாகவும், மேற்கு வங்க அரசு உரிய நேரத்தில் அதிகாரிகளை வழங்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மாநில அரசிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லாததால் பார்வையாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மேற்கு வங்கம் பதில்
அதேநேரம் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் ஆணையத்தின் கூற்றை மறுத்தார். தேர்தல் ஆணையம் க்ரூப் பி அதிகாரிகளை ஒருபோதும் கோரவில்லை என்றும் அத்தகைய கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
-
முஸ்லீம் வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்.. மேற்கு வங்கத்தில் வெடித்த SIR சர்ச்சை! பெரும் குழப்பம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications