அதிமுக மாஜி அமைச்சர் கேசி வீரமணிக்கு பின்னடைவு.. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து விவரங்களைக் குறைத்து, தவறான தகவல்களை அளித்ததாக, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஐகோர்ட்டில் விசாரணை நடந்தபோது, ஜோலார்ப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரித்துறை, வருவாய்க் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில், கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறி இருந்த அசையும் சொத்துகளின் மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14.30 கோடி வித்தியாசம் உள்ளது கண்டறியப்பட்டது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி, நேரடி வரிகள் வாரியம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் மனுத்தாக்கல் செய்ய தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து 2021 தேர்தல் வேட்புமனுவில் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்தது, போலியான பான் கார்டு எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, கே.சி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications