உச்சநீதிமன்றம் அதிரடி- 'கள்ள காதல்', விபச்சாரி வார்த்தைகளுக்கு இனி தடை- புதிய சொற்கள் வெளியீடு!
டெல்லி: உச்சநீதிமன்றம் பாலின வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் சபாஷ் போடுகிற வகையில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. முகம் சுளிக்க வைக்கும் அல்லது பெண்களை இழிவுபடுத்துகிற வகையிலான பாலின வார்த்தைகளுக்கு மாற்றான வார்த்தைகள் அந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், அநீதியான அல்லது முகம் சுளிக்க வைக்கும் வகையில் பயன்படுத்தக் கூடிய பாலினம் சார்ந்த/ பாலியல் வழக்கு சார்ந்த வார்த்தைகளுக்கு மாற்றான வார்த்தைகளுடனான 30 பக்க கையேடு ஒன்று வெளியிடப்பட்டதாக அறிவித்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கு விசாரணைகளின் போது ஒரே மாதிரியான சொற்களை பயன்படுத்தும் வகையில் இந்த கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது; நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எளிதாக வழக்கு நடைமுறைகளை புரிந்து கொள்ளவும் முடியும் என்றார்.
இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ள சொற்கள்தான் இனி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிற மனுக்கள், நீதிபதிகளின் உத்தரவுகள் உள்ளிட்ட சட்டம் சார்ந்த அனைத்து நடைமுறைகளில் இடம்பெறும்.
இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ள சில சொற்களும் மாற்று சொற்களும்:
விபச்சாரி adulteress- திருமணம் கடந்த பாலுறவு கொள்ளும் பெண்
தகாத உறவு Affair - திருமணம் கடந்த உறவு
bastard - திருமண உறவு இல்லாமல் பிறந்த குழந்தை அல்லது குழந்தையின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளாதவர்கள்
eve teasing- சாலையோர பாலியல் துன்புறுத்தல்
house wife - house maker வீட்டில் பணிபுரிபவர்
இந்த கையேட்டின் அடிப்படையிலேயே பெண்களை குறிப்பிட வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான சொற்களை இனி தவிர்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications