”புதிய ஷாபானு கேஸ்”: விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டு- உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: விவகாரத்து பெற்ற இஸ்லாமிய பெண் ஒருவர் ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. தெலுங்கானா நீதிமன்றம் விவகாரத்து செய்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக சமத் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் விவகாரத்து பெற்ற இஸ்லாமிய பெண் ஜீவனாம்சம் பெறலாம் என உத்தரவிட்டது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் மனைவியை முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இது தொடர்பாக குடும்ப நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார். இந்த வழக்கில் தெலுங்கானா குடும்ப நீதிமன்றம், விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ20,000 மாதந்தோறும் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் சமத் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விவகாரத்து பெற்ற பெண்ணுக்கு ரூ10,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

குற்றவியல் சட்டப் பிரிவு 125: இதற்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் முறையிட்டார். அதாவது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-ன் கீழ் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் சமத் தரப்பு வாதிட்டிருந்தது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது. மேலும் குற்றவியல் சட்டம் 125 என்பது திருமணமான பெண்களுக்குதான் என்றில்லை அனைத்து பெண்களுக்கும் பொருந்தக் கூடிய பிரிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
1986 சட்டத்தை மீறவில்லை: மேலும் இஸ்லாமிய பெண்கள் விவகார உரிமை பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ மீறுகிறது ஜீவனாம்ச உத்தரவு எனவும் சமத் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். அப்போது, ஜீவனாம்சம் என்பது தொண்டு போன்றது; இது திருமணமான பெண்களின் மதங்களைக் கடந்தது. பெண்களின் பொருளாதார பாதுகாப்புக்கானது; பாலின சமத்துவத்துக்கானதுவும் என அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஷாபானு வழக்கு பின்னணி: 1985-ம் ஆண்டு இந்திய நீதித்துறையில் ஷாபானு ஜீவனாம்ச வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த வழக்கிலும் குற்றவியல் சட்டம் 125-வது பிரிவுதான் மையமாக இருந்தது. 1978-ம் ஆண்டு முதல் ரூ500 ஜீவனாம்சம் கேட்டுதான் ஷாபானு வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஷபானுவின் கணவரோ, விவகாரத்து கொடுத்த பின் ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமை என வாதிட்டார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஷாபானு வழக்கு நடைபெற்றது. உச்சநீதிமன்றமான இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய பெண்களும் விவகாரத்துக்குப் பின்னர் ஜீவனாம்சம் பெற முடியும் என அதிரடித் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1986-ம் ஆண்டு இஸ்லாமிய பெண்கள் மணமுறிவு உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டத்துக்கு பெண்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமிய பெண்களில் விவகாரத்து உரிமையை வலிமையாக உறுதி செய்யவில்லை இந்த சட்டம்; மேம்போக்கானது என கூறப்பட்டது. அப்போதுதான் உச்சநீதிமன்றமானது பொது சிவில் சட்டம் என்கிற கருத்தை முன்வைத்தது என்பதுதான் இந்திய நீதித்துறையின் முக்கியமான வரலாறாகும்.












Click it and Unblock the Notifications