Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒருவரால் பட்டியல் ஜாதி அந்தஸ்தை கோரவோ அல்லது பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தவோ முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்து, சீக்கியம், புத்த மதம் தவிர வேறு எந்த மதத்துக்கு மாறினாலும் பட்டியல் ஜாதி அந்தஸ்தை முழுமையாக இழக்க நேரிடும் என்று அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

scheduled Caste religion supreme court

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர். இவர் பட்டியலினத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். பிட்டலவனிபாலா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுபற்றி மதபோதகர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஜாதி சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக அவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் மீது எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதனை எதிர்த்து அவர்கள் ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போ, ''மதபோதகர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி அதனை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இதனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்த சட்டத்தில் அனுமதியில்லை'' என்று கூறி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் மதபோதகரை தாக்கியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, என்வி அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு வழங்கியபோது கூறியதாவது: ''இந்த வழக்கில், மனுதாரர் கிறிஸ்தவ மதத்திலிருந்து தான் பிறந்தபோது இருந்த மதத்துக்கு மீண்டும் திரும்பவில்லை. அவர் கிறிஸ்தவ மதத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக மதபோதகராகவும் இருக்கிறார். வீட்டில் ஞாயிறு தோறும் கிறிஸ்தவ பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருவதை ஆதாரங்கள் காட்டுகிறது. அதேபோல் தாக்குதல் சம்பவம் நடந்த தேதியில் அவர் கிறிஸ்தவராகவே இருந்துள்ளார்.

கிறிஸ்தவராக மாறியவருக்கு பொருந்தாது

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோரவோ அல்லது பட்டியில் ஜாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ கோர முடியாது.

ஏனென்றால் தனி நபர் ஒருவர் கிறிஸ்தவராக மாறின அந்த மதத்தை பின்பற்றும்போது அவர் தொடர்ந்து பட்டியல் ஜாதியாக இருக்க முடியாது. இதனை அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது.

இந்து - சீக்கியம்- புத்த மதத்துக்கு மட்டும்

அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை 1950 பிரிவு 3ன்படி, இந்து, சீக்கியம், புத்த மதம் தவிர பிற மதங்களுக்கு மாறுவது என்பது பட்டியல் ஜாதி அந்தஸ்தை முழுமையாக இழக்க செய்ய வழிவகை செய்கிறது.

ஒரு நபர் மேற்கூறிய பிரிவு 3ல் குறிப்பிடப்பட்ட மதத்தை தவிர வேறு மதத்தைப் பின்பற்றி கொண்டு பட்டியல் ஜாதியின் உறுப்பினர் என்று ஒருபோதும் உரிமை கோர முடியாது. இதன்மூலம் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+