Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சுத்த வேஸ்ட்.. சிபிஐ-ல் இருப்பவர்கள் தகுதியற்ற அதிகாரிகள்.." சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹிமாச்சல பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரி விமல் நேகி மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் சிபிஐயின் விசாரணை நடைமுறை மற்றும் தரம் குறித்து தங்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஹிமாச்சல பிரதேச பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தவர் விமல் நேகி.. இவர் கடந்த மார்ச் 10ம் தேதி சிம்லாவில் இருந்தபோது திடீரென மாயமானர். இதற்கிடையே எட்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 18ம் தேதி அவரது உடல் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Supreme Court Slams CBI Probe as Childish amp amp Incompetent and says Bogus Officers Playing Politics

முன்ஜாமீன்

விமல் நேகியின் மரணத்திற்கு அவரது உயர் அதிகாரிகள் கொடுத்த தொந்தரவே காரணம் என்று அவரது மனைவி குற்றம் சாட்டினார். வேண்டும் என்றே இரவு நீண்ட நேரம் வேலை செய்ய வைப்பது, தவறான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தியது எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த மர்ம மரணம் இமாச்சலப் பிரதேசத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்த வழக்கை இப்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக HPPCL நிறுவனத்தின் மின்சாரத் துறை இயக்குநர் தேஷ் ராஜ் என்பவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அதிகாரி எழுப்பிய கேள்விகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் "இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்ட அந்த விசாரணை அதிகாரி யார்? இது மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. இந்தக் கேள்விகளை எழுப்பியது ஒரு மூத்த அதிகாரியாக இருந்தால், சிபிஐ அமைப்பை நினைத்தால் வருத்தமளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் கேள்விகளைக் கொஞ்சம் பாருங்கள்.. இவரை இதற்காகத் தான் இடமாற்றம் செய்தீர்களா? என்று ஒரு கேள்வி இருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் நீங்கள் இப்படித் தான் கேள்வி எழுப்புவீர்களா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஏற்க மறுப்பு

நீதிபதிகள் மேலும், "இப்படிக் கேள்வி கேட்டுவிட்டு அவரிடமிருந்து நீங்கள் என்ன பதில்களை எதிர்பார்க்கிறீர்கள்? சரி, எல்லாவற்றையும் விடுங்கள்.. குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் போய் இதை நீங்கள் தானே செய்தீர்கள் என கேட்டால் என்ன பதில் சொல்வார்.. குற்றவாளியாக இருந்தாலும் மறுப்பார் தானே?" என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணைக்கு தேஷ் ராஜ் ஒத்துழைப்பு தரவில்லை என்று சிபிஐ தெரிவித்திருந்தது. இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இந்தக் கேள்விகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறாரா? அவர் ஒருவேளை அமைதியாக இருந்தால், அது அரசியலமைப்பு உரிமை" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

போலி அதிகாரிகள்

மேலும், நீதிபதிகள், "இதை நீங்கள் ஒத்துழைக்க மறுப்பது என்கிறீர்களா? சிபிஐயில் உங்களுக்கு என்ன மாதிரியான அதிகாரிகள் இருக்கிறார்கள்? முற்றிலும் போலியான அதிகாரிகள். தகுதியற்றவர்கள். நீங்கள் கொடுத்ததே ஒரு பயனற்ற டாக்குமெண்ட். இதில் இருக்கும் அனைத்தும் ஊகங்கள் தான்.. இது ஆதாரம் என்று கூறும் அளவுக்கு உறுதியாக எதுவும் இல்லை" என்று நீதிபதிகள் விமர்சித்தனர்.

சிபிஐ சமர்ப்பித்த ஆவணங்களில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தேஷ் ராஜுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+