அரசியல் மோதல்களிலிருந்து அமலாக்க துறை விலகி இருக்கணும்! குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்.. என்ன நடந்தது
டெல்லி: முடா எனப்படும் மைசூர் நகர மேம்பாட்டு ஆணைய நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் செயல்பாடுகளை விமர்சித்த சுப்ரீம் கோர்ட், சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியல் மோதல்களில் இருந்து அமலாக்க துறை விலகி இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்திருந்தது. அதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் சித்தராமையா மனைவி பார்வதியை விசாரிக்க அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

சுப்ரீம் கோர்ட்
இந்தச் சம்மனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் முதலில் கர்நாடக ஐகோர்ட் அதை ரத்து செய்திருந்தது. கர்நாட ஐகோர்ட் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மனை ரத்து செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும், அமலாக்கத் துறை செயல்பாடுகளையும் கடுமையாகக் கண்டித்தனர்.
அரசியலில் இருந்து தள்ளி இருக்கணும்
அமலாக்க துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "தயவுசெய்து எங்களை எதாவது சொல்லக் கட்டாயப்படுத்தாதீர்கள்.. இல்லையெனில் அமலாக்கத் துறை பற்றி சில கடுமையான கருத்துக்களைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு மகாராஷ்டிராவில் இதுபோன்ற அனுபவம் இருக்கிறது... வாக்காளர்கள் முன் அரசியல் சண்டைகள் நடக்கட்டும். நீங்கள் ஏன் பயன்படுத்தப்படுகிறீர்கள்" என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி, அமலாக்கத் துறை தனது மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறியது. அதேநேரம் இது ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியது.
முடா வழக்கு பின்னணி
முடா வழக்கில் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கியதாக சித்தராமையா முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவரது மனைவி பார்வதி இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதால் அவரை விசாரிக்க வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தை அவர் பெற்றிருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை வாதிட்டது.
இருப்பினும், அந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைத்துவிட்டதாகவும், அதன் மூலம் எந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் பார்வதி தரப்பு கூறியது. மேலும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வரும் விஷயத்தை அமலாக்கத் துறை தனியாக விசாரிக்க முயல்வதாகவும் அவர் வாதிட்டார். கர்நாடக மாநில அரசின் லோக் ஆயுக்தா நடத்திய விசாரணையில் முதலமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
ஏன் முக்கியம்
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத் துறை போன்ற மத்திய அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜக தங்களது அரசியல் எதிரிகளைக் குறிவைத்துத் துன்புறுத்துவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றமே அரசியல் மோதல்களில் இருந்து அமலாக்கத் துறை விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications