பலாத்கார வழக்கில்.. பெண்ணுக்கு "தோஷம்" இருக்கா! ஆய்வு செய்ய சொன்ன ஐகோர்ட்! தடை விதித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்து அவருக்குத் தோஷம் இருக்கிறதா என அறிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில், இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் இப்போது கோடை விடுமுறையில் இருக்கிறது. இது மட்டுமின்றி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கு விசாரணையும் நடைபெறாது. இந்தச் சூழலில் தலைமை நீதிபதி இதில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.

அதிலும் தலைமை நீதிபதி சந்திரசூட் இப்போது இந்தியாவிலேயே இல்லை வெளிநாட்டில் இருக்கிறார். அந்தச் சூழலிலும் அவர் இதில் தலையிட்டுள்ளது இதை முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது.
உத்தரவு: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து இன்று காலை அறிந்து கொண்ட தலைமை நீதிபதி, இது குறித்து விசாரிக்க பெஞ்ச் ஒன்றை அமைக்குமாறு பதிவாளரிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய அமர்வு மாலை 3 மணிக்கு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதக ஆய்வு செய்ய லக்னோ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த உத்தரவு மிகவும் கவலையளிக்கிறது என்றும், தடை விதிக்கப்படலாம் என்றும் கூறினார்.
என்ன வழக்கு: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்தாக அலகாபாத் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் அந்த பெண்ணுக்குத் தோஷம் இருப்பதாகவும் தன் காரணமாகவே அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பேராசிரியர் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது.
அந்த பேராசிரியர் கூறுவது போல அந்த பெண்ணுக்கு உண்மையில் தோஷம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து ஒரு வாரத்தில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்ய லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் துறைத் தலைவருக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்திற்குத் தான் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த உத்தரவு மிகவும் கவலையளிக்கிறது என்றும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
அந்த பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய்குமார் சிங், இருதரப்பு ஒப்புதலின் பேரிலேயே அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்ள ஜாதகம் காரணம் என்று அவர் கூறியதே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றம்: இதைக் கேட்ட நீதிபதிகள், "ஜாதகம் பார்ப்பது எல்லாம் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதில் சந்தேகமில்லை. இதையெல்லாம் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் வழக்கு அது குறித்து இல்லை. இந்த வழக்கில் ஜாதகத்தைப் பார்த்து எதற்காக அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னார்கள் என்று உண்மையாகவே புரியவில்லை" என்று கூறி அதற்குத் தடை விதித்தனர். மேலும், இது குறித்து விளக்க இரு தரப்பினரும் நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications