மார்பை தொடுவது பலாத்காரம் இல்லை என்ற ஐகோர்ட் தீர்ப்பை.. தாமாக முன்வந்து விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பெண்ணின் மார்பகங்களைத் தொடுவது அல்லதது அவரது பைஜாமா கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பது ஆகியவற்றைப் பலாத்கார முயற்சியாகக் கருதப்படாது என்று அலகாபாத் ஐகோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது விவாதத்தைக் கிளப்பியிருந்த நிலையில், இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது..
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பாலியல் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அலகாபாத் ஐகோர்ட்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அலகாபாத் ஐகோர்ட்டில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு பெண்ணின் மார்பகங்களைத் தொடுவதோ பைஜாமா கால்சட்டையின் நாடாவை அவிழ்ப்பதோ பலாத்கார முயற்சியாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு என்றால் என்ன என்பது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்துக்குச் சட்ட வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைய அது காரணமாக இருந்துவிடும் என்றும் கூறியிருந்தனர்.
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை
இதற்கிடையே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. புதன்கிழமை (மார்ச் 26) நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இதில் சட்ட ரீதியான விளக்கங்களையும் கருத்துகளையும் உச்ச நீதிமன்றம் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலகாபாத் ஐகோர்ட்
முன்னதாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்ய அதற்கேற்ப சம்பவங்கள் நடந்து இருக்க வேண்டும் என்றும் அது பலாத்கார முயற்சி தான் என்று சொல்லும் அளவிற்கு உறுதியான சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறினர். மேலும், அதனை விசாரணை அமைப்புகள் உறுதியாக நிறுவ வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்
மேலும், பலாத்கார முயற்சி குற்றத்திற்கும் அதற்குத் தயாராவதற்கும் வேறுபாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதையும் விசாரணையில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர். புதிய வழக்குகளை இதைக் கருத்தில் கொண்டே பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பெண்கள் அல்லது சிறுமிகளின் மார்பகங்களைப் பிடிப்பதும், பைஜாமாவை அவிழ்ப்பது அல்லது அந்த பெண் அல்லது சிறுமியை மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதைப் பலாத்கார முயற்சி அல்லது பலாத்காரமாகக் கருத முடியாது என்று அலகாபாத் கோர்ட் கூறி இருந்தது.
வழக்கின் பின்னணி
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 10ம் ததி மாலை 5:00 மணியளவில், பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரியின் வீட்டிற்கு சென்ருவிட்டு தனது 14 வயது தனது மகளுடன் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவர், மைனர் சிறுமியைக் கிராமத்தில் விட்டுவிடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளனர். சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணும் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்..
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் செல்லும் வழியிலேயே டூவீலரை நிறுத்தி அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.. மார்பகங்களைப் பிடித்தும் பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தும் அத்துமீறியுள்ளனர். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்குச் சென்ற இருவர் சிறுமியை மீட்டுள்ளனர். இந்த வழக்கில் தான் அலகாபாத் நீதிமன்றம் மேற்கூறிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தது. அதைத் தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications