தசரா விடுமுறைக்கு பின் காஷ்மீர் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை- உச்சநீதிமன்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை தசாரா விடுமுறைக்குப் பின்னர் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவு மத்திய பாஜக அரசால் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமே ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக கூறு போடப்பட்டன.

மேலும் ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய பாஜக அரசு தேர்தல் நடத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த 370-வது பிரிவு நீக்கம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி யுயு லலித் பெஞ்ச் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் சுட்டிக்காட்டினார். அப்போது, இவ்வழக்கு தசாரா விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்றார் தலைமை நீதிபதி யுயு லலித்.
உச்சநீதிமன்ற தசாரா விடுமுறைகள் அக்டோபர் 3-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை. அதன்பின்னரே இவ்வழக்கின் விசாரணை நடைபெறும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications