என்ன ஆகுமோ? பதற்றத்தில் பொன்முடி... 3 ஆண்டு தண்டனைக்கு எதிரான அப்பீல்- நாளை உச்சநீதிமன்றம் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.75 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

Supreme Court to hear Ponmudis appeal against 3 years imprisonment tomorrow

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார். டிசம்பர் 21-ந் தேதி 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதனடிப்படையில் பொன்முடி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். மேலும் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கான 3 ஆண்டு சிறை தண்டனையை 30 நாட்களுக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் 3 ஆண்டுச் சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. உச்சநீதிமன்றம் நாளை பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்குமா? இல்லை சிறை தண்டனையை உறுதி செய்யுமா? அப்படி உறுதி செய்தால் பொன்முடி, மனைவியுடன் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+