ஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் விதிமீறலை காட்டிய தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் நேற்று நடந்த விசாரணையில் தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்தால் நடத்தப்படுகிறது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் வாயுக்களால் அப்பகுதி மக்களுக்கு தோல் புற்றுநோய், மலட்டுத்தன்மை, மாற்றுத்திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகள், விஷமாக மாறிய நிலத்தடி நீர் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதை எதிர்த்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் அமைதியான வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர்.
அவர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 14 ஆம் தேதி வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதங்கள் நடந்தன. அதில் தமிழக அரசு கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதே இல்லை. எந்த ஒரு விதியையும் அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை கூட ஸ்டெர்லைட் நிர்வாகம் பல முறை மீறியுள்ளது.
விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கெனவே ரூ 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது என தெரிவித்தது. அப்போது வேதாந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் ஸ்டெர்லைட்டை இயக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம். அவர்கள் ஒரு மாதத்தில் தரும் அறிக்கையை வைத்து உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, "ஏற்கெனவே ஆலை மாசு ஏற்படுத்தியுள்ளது என பல குழுக்கள் கண்டறிந்துள்ளன. ஜிப்சம், தாமிரக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல்களை பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் புதிய குழு எதற்கு. எனவே ஆலை இயங்குவதற்கு கோர்ட் அனுமதிக்கவே கூடாது என வாதிட்டது.
அப்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக் கொண்டால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா தரப்பில் கூறியிருப்பதாவது: நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என நிபுணர் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்பதற்காக அவர்களது பிரச்சினைகளை புறம் தள்ளவும் முடியாது. அதே சமயம் தமிழக அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் இருந்து விட முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என்றும் கூறிவிட முடியாது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications