அதானி வழக்கு: "ஹிண்டன்பர்க்" நிறுவன அறிக்கை மீது விசாரணை கோரி மனு: சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை
அதானி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது
டெல்லி: அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த "ஹிண்டன்பர்க்" வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இந்திய பணக்காரர்களில் நம்பர் 1 இடத்திலும், உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த கௌதம் அதானியின் அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த குற்றச்சாட்டு வெளியானதில் இருந்தே தேசிய அரசியல் கொந்தளித்து காணப்படுகிறது.. எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை எழுப்ப, பாஜகவோ பதிலளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது..
இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.. இது தொடர்பான அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன... இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்தது.
இந்நிலையில், வழக்கறிஞர் விஷாஸ் திவாரி என்பவர், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது விசாரணை கோரும் மனு ஒன்றினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.. இதனிடையே, கடந்த வாரம் வழக்கறிஞர் எம்எல் ஷர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும், 'ஷார்ட் செல்லிங்' எனும் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து, இதன் வாயிலாக அதிக லாபம் அடைந்துள்ளனர். இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளனர்... இதன்வாயிலாக, அப்பாவி முதலீட்டாளர்களையும், இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
இதற்காகவே இவர்கள் திட்டமிட்டு, அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதை செய்துள்ளனர்.. இதை செய்துள்ள நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்க உள்ளது.. ஏற்கனவே அதானி குழு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இன்றைய தினம் பெற்றுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications