Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதஞ்சலியை 'பஞ்சராக்கிய' உச்சநீதிமன்றம்! நடவடிக்கைக்கு ரெடியா இருங்க.. பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அறிவியலுக்கு புறம்பாக விளம்பரம் செய்த விவகாரத்தில், பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு. மட்டுமல்லாது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என பாபா ராம்தேவுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

Supreme Court warns Patanjali s Baba Ramdev to be ready to face contempt of court action

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. அதேபோல இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மட்டுமல்லாது, பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸையும் உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜராகியிருந்த துருவ் மேத்தா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை.

“நீங்கள் மன்னிப்பு கேட்கும் பொழுது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள். அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது? உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம்” என்று காட்டமாக கூறியிருந்தனர்.

அதேபோல மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், உத்தரகாண்ட் மாநில அரசு சார்பில் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர். அதிகாரிகளை பார்த்து நீதிபதிகள் சரமாரி கேள்வியை எழுப்பியிருந்தனர்.

அதாவது, “பதஞ்சலி நிறுவனத்திற்கு நீங்கள் இணங்கி சென்றிருக்கிறீர்கள் என ஏன் நினைக்க கூடாது? நாங்கள் ஏன் அனைத்து அதிகாரிகளையும் இப்போதே சஸ்பெண்ட் செய்யக் கூடாது? மருந்து மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரிகளின் வேலை என்ன என்பது தெரியுமா? உங்கள் அதிகாரிகள் எதையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள போவதில்லை” என்று கூறி பதஞ்சலி மீது நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் மாநிலத்தின் மருந்து உரிமை வழங்கல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மட்டுமல்லாது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என பாபா ராம்தேவுக்கு நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

பதஞ்சலியின் பொருட்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் இப்பொருட்களின் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதாவது, இப்பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருட்களை கொண்டே உற்பத்தி செய்யப்படுகிறது என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனவே பதஞ்சலி தயாரிப்பிலிருந்து 82 பொருட்களை எடுத்து ஹரித்வார் ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகம் ஆய்வு செய்தது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருந்தன. இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக சொல்லப்பட்ட தயாரிப்புகளில் 31 சதவிகிதம் அந்நிய நாட்டின் மூலப்பொருட்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல 82 தயாரிப்புகளில் 40 சதவிகித பொருட்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் தரமற்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ராணுவ கேண்டீன்களில் விற்க தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+