சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்த விஜிலன்ஸ்.. சிபிஐ இயக்குனர் வெர்மா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கின் உச்ச நீதிமன்றம் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கின் உச்ச நீதிமன்றம் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா குறித்து விஜிலன்ஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

அரசு முடிவு
இதனால் சிபிஐ அமைப்பிற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. இதில் குறுக்கே வந்த மத்திய அரசு சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார்.

வழக்கு தொடுத்தார்
இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 2 வாரம் முன் இதற்காக விசாரணை கமிட்டி அமைத்தார். அலோக் வெர்மாவிற்கு எதிராக அஸ்தானா வைக்கும் புகார்கள் உண்மையா, மத்திய அரசின் நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது என்று விசாரிக்கும்படி விஜிலென்ஸ் கமிஷன் உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிட்டியை அமைத்தார்.

அறிக்கை சமர்பிக்கப்பட்டது
இந்த விசாரணை தற்போது முடிந்து இருக்கிறது. இந்த அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்துள்ளார். இந்த விஜிலன்ஸ் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

விசாரணை ஒத்திவைப்பு
இந்த அறிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்கே கவுல் அமர்வு சோதனை செய்யும். இந்த வார இறுதியில் இந்த அறிக்கை மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும். இதையடுத்து அலோக் வெர்மா தொடுத்த வழக்கின் உச்ச நீதிமன்றம் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications