டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாவோயிஸ்ட்டுகள் தொடர்பு: பேராசிரியர் சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Google Oneindia Tamil News

டெல்லி: மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபா. இவருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த 2014இல் கைது செய்யப்பட்டார்.

உபா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாய்பாபா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

SupremeCourt hearing Maharashtras petition challenging acquittal of Prof GN Saibaba & 5 others in UAPA case

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவராக இருந்த ஹேம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.

இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட் நாக்பூர் பெஞ்சில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் பெஞ்ச் அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலை உத்தரவுக்குத் தடை விதிக்க நேற்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி இது மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மாற்றுத் திறனாளி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்கும் மும்பை ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மாவோயிஸ்டுகள் தொடர்பு: பேரா. சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!மாவோயிஸ்டுகள் தொடர்பு: பேரா. சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

English summary
SupremeCourt hearing Maharashtra's petition challenging acquittal of Prof GN Saibaba & 5 others in UAPA case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X