போச்சு.. டிரம்ப் தொடுத்த வர்த்தக போர்! திருப்பூர், நொய்டா, சூரத்தில் நிறுத்தப்பட்ட.. ஜவுளி உற்பத்தி?
டெல்லி: அமெரிக்க அதிபர் கொண்டு வந்து உள்ள 50% கூடுதல் வரி விதிப்பால், திருப்பூர், நொய்டா, சூரத் போன்ற தொழில்துறை மையங்களில் உள்ள ஏற்றுமதி சார்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த 50% வரிவிதிப்பு, இன்று (ஆகஸ்ட் 27, 2025) இந்திய நேரப்படி காலை 9:31 மணிக்கு அமலுக்கு வருகிறது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக 25% சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் பொருளாதாரத் தொடர்பு வைத்துள்ள நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் வரிவிதிப்பு நடவடிக்கையின் உச்சமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய வரிவிதிப்பை, இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்கா வரி விதிப்பு
2025 நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த $86.5 பில்லியன் பொருட்களில், $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், அதாவது மூன்றில் இரண்டு பங்கு, இப்போது 50% வரிவிதிப்பின் கீழ் வரும். இந்திய அரசின் மதிப்பீடுகள் சற்று குறைவாக, $48.2 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகள் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றன.
இந்த வரிகள் நீடித்தால், 2026 நிதியாண்டில் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி $49.6 பில்லியனாகக் குறையக்கூடும் என்று GTRI கணித்துள்ளது. இது கிட்டத்தட்ட ஐந்து வருட ஏற்றுமதி வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் நிலை ஏற்படும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அமெரிக்க சந்தையை அதிகம் சார்ந்திருக்கும் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு, ரசாயனங்கள் மற்றும் வாகன பாகங்கள் போன்ற துறைகள் இந்த வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
அமெரிக்க அதிபர் கொண்டு வந்து உள்ள 50% கூடுதல் வரி விதிப்பால், திருப்பூர், நொய்டா, சூரத் போன்ற தொழில்துறை மையங்களில் உள்ள ஏற்றுமதி சார்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் போட்டியாளர்களிடம் இந்திய ஜவுளி அலகுகள் தங்கள் இடத்தை இழந்து வருவதாக FIEO அமைப்பு தெரிவித்து உள்ளது. சீனா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் உள்ளிட்ட இந்திய உற்பத்தி அலகுகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவின் புதிய 50% வர்த்தக வரி விதிப்பு, இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான இந்திய ஏற்றுமதிகள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படவுள்ளன. அனைத்துத் துறைகளும் சமமாகப் பாதிக்கப்படாவிட்டாலும், குறிப்பிட்ட சில துறைகள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையாக பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதி
ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில், அமெரிக்காவிற்கான $9.94 பில்லியன் ஏற்றுமதிக்கு இப்போது 52.1% வரி விதிக்கப்படும். இது இத்துறையின் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வைரப் பதப்படுத்துதலில் 80% கையாளும் சூரத், ஏற்கனவே ஆர்டர் ரத்து மற்றும் ஆட்குறைப்புகளை எதிர்கொள்கிறது.
கடல் உணவு ஏற்றுமதியில், இந்தியாவின் மொத்த இறால் ஏற்றுமதியில் சுமார் 50% அமெரிக்காவிற்குச் செல்கிறது. இது $2.4 பில்லியன் அல்லது சுமார் ₹20,000 கோடி மதிப்பிலானது. இப்போது 60% வரி விதிப்புடன், இந்திய ஏற்றுமதியாளர்கள் எக்குவடோரால் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. எக்குவடோர் இறாலுக்கு வெறும் 15% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications