சர்ஜிக்கல் ஸ்டிரைக்? உள்ளே புகுந்து அட்டாக்? தீவிரவாதிகள் தாக்குதல்! இந்தியாவிடம் உள்ள 4 ஆப்ஷன்கள்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு என்ன மாதிரியான பதிலடி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நேற்று நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றொருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில் அந்தப் பகுதியை கால்நடையாகவோ அல்லது குதிரையின் மூலமாகவோ மட்டுமே அணுக முடியும். இதனால் அங்கே மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சிக்கல்.

Surgical Strike or planned Encounter What are the 4 response options there infront of India after JK Pahalgam attack

இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகர் சென்றடைந்தார், அங்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நளின் பிரபாத் அவரிடம் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி - தனது இரண்டு நாள் சவூதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு நேற்று இரவு இந்தியாவுக்கு புறப்பட்டார்.

பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.

பதிலடி

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு என்ன மாதிரியான பதிலடி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

1. நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம்.

2. பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்தலாம்.

3. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என்கவுண்டர் செய்யலாம்.

4. அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

உலக தலைவர்கள் இரங்கல்

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவின் அழகையும், அதன் மக்களையும் கண்டு வியந்துள்ளோம், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாகவும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேபோல ரஷ்யா அதிபர் புடினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+