சுஷாந்த் தற்கொலை.. 3 மாதத்தில் ஓய்வு முடிவை எடுத்த தோனி.. இந்த வருடம் மிக மோசம்.. ரசிகர்கள் கலக்கம்!
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு சரியாக 3 மாத இடைவெளியில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து இருக்கிறார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் மரணம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வரவில்லை. சுஷாந்த்சிங் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுக்க எல்லோருக்கும் இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தோனி நெருக்கம்
இவர் தோனிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது . தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சுஷாந்த் சிங்தான் நடித்து இருந்தார். எம் எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படம் மூலம்தான் சுஷாந்த் சிங் நாடு முழுக்க அறிமுகம் ஆனார். இவரின் நடிப்பு இதில் பெரிய அளவில் பேசப்பட்டது.

அப்படியே
அதிலும் இவர் தோனி போலவே நடித்து இருந்தார். விளையாடும் போது ஹெல்மெட்டிற்குள் கையைவிட்டு வியர்வையை துடைப்பது தொடங்கி ஹெலிகாப்டர் ஷாட் வரை இவர் மிக சிறப்பாக அப்படியே செய்து இருந்தார். பலரும் சுஷாந்த் நடிப்பை பாராட்டி இருந்தனர். பாரேன் வித்தயாசமே தெரியலை என்பது போலதான், பலரும் சுஷாந்த் நடிப்பு குறித்து குறிப்பிட்டு இருந்தனர்.

தற்கொலை
சினிமா என்பதையும் தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதிலும் தோனியின் மகள் ஸிவாவிற்கு சுஷாந்த் சிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். இந்த நிலையில்தான் சுஷாந்த் சிங் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு தோனிக்கு பெரிய அளவில் வருத்தம் அளித்ததாக அவரின் மேனேஜர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.

கண்ணீர்
இந்த தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தோனி வருத்தப்பட்டார் என்றும் செய்திகள் வந்தது. தற்போது சரியாக சுஷாந்த் தற்கொலைக்கு பின் மூன்று மாதம் கழித்து தோனி தனது ஓய்வை அறிவித்து உள்ளார். இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், தோனி ரசிகர்களை இந்த விஷயம் கலங்கடித்து உள்ளது. சுஷாந்த் மறைவு , தோனி ஓய்வு என்று அடுத்தடுத்து இப்படி செய்திகள் வெளியாகி வருகிறது.

மிக மோசமான வருடம்
கொரோனா காரணமாக இந்த வருடமே மிக மோசமானதாக மாறிவிட்டது. பெய்ரூட் வெடிப்பு, கேரளா விமான விபத்து, நிலச்சரிவு, ஆந்திர பிரதேச விஷவாயு கசிவு, இம்ரான் கான் மறைவு என்று அடுத்தடுத்து இந்தியா முழுக்க தொடர் சோக சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் இந்த வருடமே மிகவும் மோசமான வருடம் என்று நெட்டின்சன்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications