டே! மகனுங்களா! நான் உயிரோடு இருக்கேனா இல்லையா? எனக்கே சந்தேகமா இருக்கே..'அதகள' நித்தியானந்தா வீடியோ!
டெல்லி: சாமியார் நித்தியானந்தா தம்மை பற்றி வெளியான தகவல்களை மறுத்து தாம் நலமுடன் இருப்பதாக நேற்று இரவு முதலே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சாமியார் நித்தியானந்தா இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், தம்மை பற்றிய சமூக வலைதள கருத்துகளால் தாம் உயிரோடு இருக்கேனா இல்லையா என்பது தமக்கே சந்தேகமாக இருப்பதாக நகைச்சுவையாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"நான் வீழ்வேன் என நினைத்தாயோ?" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா. அதில், இன்னமும் ஆகக் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். நான் வன்முறையை விரும்பாதவன்; என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவதும் இல்லை. "மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க..இதுக்கு மேல தொடர்ந்து செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என அதில் பேசியுள்ளார் நித்தியானந்தா.

உயிரோடு இருக்கேனா? எனக்கே சந்தேகமா இருக்கே...
நான் வீழ்வேன் என நினைத்தாயோ? pic.twitter.com/tejsYpsfQI
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 1, 2025
"நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் பேசியுள்ள நித்தியானந்தா, நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல... ஹஹஹாஹா.. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் சந்தேகமாக இருக்கு.. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு...எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க pic.twitter.com/0MQvUwkH99
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 1, 2025
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications