குஷ்பு போலவே.. "பாலியல் சீண்டலுக்கு" ஆளான ஸ்வாதி மாலிவால்.. இவங்க அப்பாவும் தப்பா நடந்துக்கிட்டாராம்
சிறுவயதில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து ஸ்வாதி மாலிவால் பேட்டியளித்துள்ளார்
டெல்லி: சிறு வயதில் தந்தையால் தான் அனுபவித்த பாலியல் ரீதியான கொடுமைகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளிப்பாடையாக கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகள் குறித்து ஆழமாக நாம் விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று மகளிர் அமைப்புகள் அடிக்கடி கூறி வருகின்றன. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் போக்சோ குற்றம் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு ஒரு சரியான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும் என்றும், இந்த விவாதம் பொது நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று மகளிர் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, தான் சிறு வயதில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார். அதில், "பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண் குழந்தைகள் வெளிப்படையாக பேச வேண்டும். பலாத்கார சம்பவத்திற்கு அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் காரணமாக சொல்லப்படுவது ஏற்க முடியாத ஒன்று. ஆண்களுக்கு இந்த தீய எண்ணம் இருந்தால் குழந்தைகளால் என்ன முடியும்?

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்
பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆட்கள் மூலமாகதான் பாலியல் சுரண்டலை எதிர்கொள்கின்றனர். இது குடும்ப உறுப்பினர்கள், சொந்தகாரர்களால் நிகழ்த்தப்படுகிறது. எனவே இவற்றை எதிர்த்து குழந்தைகள் வெளிப்படையாக பேச வேண்டும். சிறு வயதில் நானும் இதுபோன்ற கொடுமையை எனது தந்தையிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. எனது சகோதரன் மற்றும் அம்மா ஆகியோர் குறித்து கவலை இருந்தது. இது தொடர்பாக யாரிடமாவது பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தந்தை என்னை எச்சரித்தார்.

குஷ்பு
அவர் அடிக்கடி என்னை மிரட்டினார். பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை இப்படிதான் நடக்கிறது. பின்விளைவுகளுக்கு பயந்து குழந்தைகள் இதனை வெளியில் சொல்வதில்லை. எனவே இப்படி அமைதியாக இருக்கும் குழந்தைகளை கயவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்துகிறார்கள். தற்போது இருப்பது போன்று 'போக்சோ' சட்டம் அப்போது இருந்திருந்தால் எனது தந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருப்பேன். இது தொடர்பாக நான் பொதுவெளியில் பேசிய பின்னர் பலரிடமிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. ஒரு நாள் அவர்களும் இதனை பொதுவெளியில் பேசலாம்" என்று கூறினார்.

ஸ்வாதி மாலிவால்
அதாவது இதுபோன்ற பிரச்னைகளை எதிர்க்கொண்டவர்கள் தைரியமாக பொதுவெளியில் இது குறித்து பேச வேண்டும் என்று விரும்பினார். இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் சிறு வயதில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, "நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். அவர் என்னை அடித்தார். எனவே நான் இதற்கெல்லாம் பயந்து கொண்டு கட்டிலின் அடியில் ஒளிந்துக்கொள்வேன்" என்று கூறியுள்ளார். முதலில் குஷ்பு தற்போது அவரை தொடர்ந்து ஸ்வாதி மாலிவால் ஆகியோர் இது தொடர்பாக பேசியிருப்பது பொது தளத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல
இதற்கு முன்னர் இதேபோல டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய தனது குழுவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ஸ்வாதி மாலிவால் நின்றுக்கொண்டிருந்தார். குழு உறுப்பினர்கள் பின்னால் இருக்க இவர் மட்டும் தனியாக சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த நபர் ஸ்வாதி மாலிவாலை தவறான நோக்கத்தோடு அழைத்திருக்கிறார். இதனை கண்டிக்க காரின் அருகே சென்றபோது கார் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கியதில் ஸ்வாதி மாலிவாலின் கை அதில் மாட்டிக்கொண்டு 10 மீட்டர் தூரம் வரை இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications