ஆ.. கரெக்ட்டா தாலி கட்டும் நேரத்தில் "கன்னத்தில்".. பதிலுக்கு மாப்ளையும்.. மேடையிலேயே.. திகைத்த ஜனம்
மணமகன் கன்னத்தில் கோபத்தில் பளார் என்று அறைந்துவிட்டார் மணமகள்
டெல்லி: மணமேடையில்... எல்லாரும் கூடியிருக்கும்போது, அந்த காரியத்தை செய்துவிட்டார் மணமகள்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.
இதனால் மணமேடை வரை வந்து நின்று திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.

இழவு வீடு
மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன... சில சமயம் கல்யாண வீடு, இழவு வீடாகும் துயரமும் நடந்துவிடுகிறது.. சில மாதங்களுக்கு முன்பு, தாலிகட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 4 நாட்களுக்கு முன்பு, தெலுங்கானாவில் ஒரு கல்யாண பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிசப்ஷன்
ரிசப்ஷனில் தோழிகளுடன் சேர்ந்து சினிமா பாட்டுக்கு உற்சாகமாக டான்ஸ் ஆடினார் கல்யாண பெண்.. விடிந்தால் திருமணம்.. ஆனால், நள்ளிரவு மணமகன் போனை போட்டு வரதட்சணை டார்ச்சர் செய்ததால், கல்யாண புடவையிலேயே தூக்கில் தொங்கிய சம்பவம் தெலுங்கானாவில் நடந்தது. இதோ இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. டெல்லியை சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினர்..

பளார் பளார்
மணமேடையில் தம்பதிகள் இருவருமே மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தார்கள்.. உறவினர்களும், நண்பர்களும், திருமணத்தை சிறப்பித்து கொண்டிருந்தார்கள்.. மணமகள் வெட்கத்தில் நிற்க, மாப்பிள்ளையோ நண்பர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.. பிறகு, மணமகளுக்கு, ஸ்வீட் எடுத்து ஊட்ட முயன்றார். ஆனால், மணப்பெண் ஸ்வீட் தனக்கு வேண்டாம் என்று தடுத்தார்.. மாப்பிள்ளையோ, வலுக்கட்டாயமாக ஸ்வீட் எடுத்து, மணப்பெண்ணின் வாய்க்குள் திணிக்க முயன்றார்.. இதுதான், பிரச்சனையாக வெடித்துவிட்டது.

கன்னத்தில் அறை
வலுக்கட்டாயமாக எப்படி ஸ்வீட் ஊட்டலாம் என்று மணப்பெண் தகராறு செய்தார்.. அத்துடன் விடவில்லை.. மணமகனை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. உடனே மாப்பிள்ளைக்கு கோபம் மண்டைக்கு ஏறிவிட்டது.. அவரும் பதிலுக்கு மணமகளிடம் பாய்ந்தார்.. மணமகள் ஒரு அறை விட்டால், மாப்பிள்ளை பதிலுக்கு பளார் பளார் என 4 அறை அறைந்தார்.. மணப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கினார்.. பதிலுக்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார்.. இவ்வளவும் மணமேடையில், எல்லார் முன்பும் அரங்கேறியது..

லைக்ஸ்
கடைசியில் அந்த கல்யாணமே நின்றுவிட்டது.. அற்ப விஷயத்துக்கு சண்டை போட ஆரம்பித்து, விவகாரத்தில் போய் முடிந்தது.. கடைசியில் கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் இந்த பிரச்சனையில் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய பார்த்தார்கள்.. முடியவில்லை... கல்யாணமே நின்றுவிட்டது. இந்த வீடியோவை இணையத்தில் வெளியான கொஞ்ச நேரத்திலேயே 57,000 க்கும் மேற்பட்டோர் பார்த்துவிட்டனர்.. எல்லாம் தலையில் அடித்து கொண்டு வழக்கம்போல் கமெண்ட்களுக்குள் நுழைந்துவிட்டனர். இந்த வீடியோதான் ஓடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications