முடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நாளை முதல், இந்திய அதிகாரிகள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: கருப்பு பணம் மீட்பு நடவடிக்கைகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த யார் யாரெல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார்களோ அவர்களுடைய அனைத்து தகவல்களையும் அந்த வங்கி இந்திய அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.

Swiss banking details of Indians to be made available from tomorrow

செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தகவல்களை ஸ்விஸ் வங்கி வழங்க உள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுவிஸ் வங்கியில் யார் யார் கணக்கு வைத்து உள்ளார்கள் என்ற விபரம் மர்மமாக இருந்த நிலையில், பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இவை அனைத்தும் நாளை முதல் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+