வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மத்திய அரசு அறிமுகம் செய்த 'OneTag' வசதி.. என்ன சிறப்பு? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கரை இனி பிய்த்து எடுக்காமலேயே, நீங்கள் விரும்பும் புதிய வங்கிக்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய 'ஒன்டேக்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

FASTag OneTag

ஒன்டேக் என்றால் என்ன?

நாம் செல்போன் எண்ணை மாற்றாமல் ஏர்டெல், ஜியோ என நிறுவனங்களை மாற்றுவது போல, இப்போது பாஸ்டேக்கிற்கும் போர்ட்டபிலிட்டி வசதி வந்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, பாஸ்டேக் வழங்கிய வங்கியை மாற்ற விரும்பினால், பழைய ஸ்டிக்கரை ரத்து செய்துவிட்டு, புதிய வங்கியில் விண்ணப்பித்து புதிய ஸ்டிக்கரை காரில் ஒட்ட வேண்டும். ஆனால் 'ஒன்டேக்' திட்டத்தின் மூலம், காரில் உள்ள அதே ஸ்டிக்கர் மற்றும் அதே பாஸ்டேக் ஐடி (Tag ID) அப்படியே இருக்கும்; வங்கி சேவை மட்டுமே புதிய வங்கிக்கு மாறும்.

இதை எப்படி மாற்றுவது?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ராஜமார்க்யாத்ரா மொபைல் செயலி மூலமாக இந்த வசதியைப் பெறலாம்.

1. ராஜமார்க்யாத்ரா செயலியைப் பதிவிறக்கம் செய்து லாகின் செய்யவும்.
2. உங்கள் வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு, வங்கி மாற்றம் செய்ய தகுதி உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
3. உங்கள் பழைய வங்கி உங்கள் செல்போனுக்கு 6 இலக்க சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்பும்.
4. குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்களுக்கு விருப்பமான புதிய வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
5. புதிய வங்கியுடன் புதிய கேஒய்சி விவரங்களை முடித்து, கணக்கை இணைத்துக்கொள்ளலாம்.

வங்கி மாற்றம் வெற்றிகரமாக முடிந்ததும், காரில் உள்ள அதே பழைய ஸ்டிக்கரை வைத்து நீங்கள் டோல்கேட்டுகளில் வழக்கம் போல பயணிக்கலாம்.

பழைய கணக்கில் உள்ள பணம் என்னவாகும்?

புதிய வங்கிக்கு மாறும்போது பழைய வாலட்டில் உள்ள பணம் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படாது. பழைய வங்கி உங்கள் முந்தைய வாலட் கணக்கை மூடிவிடும். அதில் மீதமுள்ள நிலுவைத் தொகை மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டு, சில நாட்களில் உங்கள் வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பப்படும்.

முக்கிய விதிமுறைகள்

6 மாத கால வரம்பு: ஒருமுறை புதிய வங்கிக்கு மாற்றிய பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் வேறு வங்கிக்கு மாற்ற முடியாது.

புதிய கேஒய்சி கட்டாயம்: புதிய வங்கியில் இணையும்போது வாடிக்கையாளர் சரிபார்ப்பு ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகனங்களுக்கான கட்டண விவரம்

பாஸ்டேக் புதிய கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச இருப்பு மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை வாகன வகைக்கு ஏற்ப மாறுபடும்:

கார், ஜீப், வேன் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள் (Class 4): பாதுகாப்பு வைப்புத் தொகை ₹200. குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை.

2-அச்சு கொண்ட இலகுரக வணிக வாகனங்கள் (Class 5): வைப்புத் தொகை ₹300; குறைந்தபட்ச இருப்பு ₹200.

3-அச்சு கொண்ட பேருந்துகள் (Class 6): வைப்புத் தொகை ₹400; குறைந்தபட்ச இருப்பு ₹500.

3-அச்சு கொண்ட லாரிகள் (Class 6): வைப்புத் தொகை ₹500; குறைந்தபட்ச இருப்பு ₹500.

2-அச்சு கொண்ட பேருந்துகள் மற்றும் மினி லாரிகள் (Class 7): வைப்புத் தொகை ₹400; குறைந்தபட்ச இருப்பு ₹500.

டிராக்டர், டிரெய்லர் மற்றும் 4 முதல் 6 அச்சு லாரிகள் (Class 12): வைப்புத் தொகை ₹500; குறைந்தபட்ச இருப்பு ₹500.

7 மற்றும் அதற்கு மேற்பட்ட அச்சு கொண்ட கனரக லாரிகள் (Class 15): வைப்புத் தொகை ₹500; குறைந்தபட்ச இருப்பு ₹500.

மண் அள்ளும் கனரக கட்டுமான இயந்திரங்கள் (Class 16): வைப்புத் தொகை ₹500; குறைந்தபட்ச இருப்பு ₹500.

தற்போதுள்ள வங்கியின் சேவை திருப்திகரமாக இல்லை என்றாலோ அல்லது பிற வங்கிகளில் சலுகைகள் கிடைக்கும் என்றாலோ, வாகன ஓட்டிகள் இனி எவ்வித சிரமமும் இன்றி எளிய முறையில் 'ஒன்டேக்' வழியாக வங்கியினை மாற்றிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+