அதிர்ந்த டெல்லி.. போதை மருந்து கடத்தலில் சிக்கிய தமிழ் சினிமா நடிகர்! அமீர் இயக்கத்தில் நடித்தவராம்
டெல்லி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமீர் இயக்கும் படத்தில் நடித்த நடிகரும் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று டெல்லியில் நடத்த கைது சம்பவம் தமிழ் திரைப்பட வட்டாரம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபோதைப் பொருள் தடுப்பு பிரிவுபோலீஸாருக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து வைத்து கடத்துவதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் ஒரு ஆபரேசனை தொடங்கினர். இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகடந்த 4 மாதங்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.
இந்த குழுவுக்கு அண்மையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக ஒரு லீட் கிடைத்தது. மேற்கு டெல்லி பகுதியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியின் குடோன் ஒன்றில் இருந்து இந்த மாஃபியா செயல்பட்டு வருவது தெரியவந்தது. அதிரடியாக குடோனுக்குள் நுழைந்த போலீஸார் அங்கிருந்தவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பை கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். ரூ.2,000 கோடி மதிப்பு இருக்குமாம்.
கைதான அந்த 3 பேர் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இவர்களின் பின்னணியில் அரசியல் மற்றும் சினிமா பின்புலம் கொண்டவர்கள் இருப்பது என்பதுதான். கைது செய்யப்பட்டவர்களின் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கடத்திலில் மூளையாக செயல்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கும் ஜாபர் சாதிக் என்பவர் சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். சலீம் என்பவரும் அரசியல் பிரமுகராக இருந்து வருகிறார். மற்றொருவர் பெயர் மைதீன். இவர் திரைப்பட நடிகராக உள்ளார். குறிப்பாக இயக்குநர் அமீர் இயக்கி வரும் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்திலும் இவர் நடித்து இருக்கிறாராம். இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 45 முறை அவர்கள் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்து இருக்கிறது. 3,500 கிலோ எடைகொண்ட வேதிப் பொருளை கடத்தி அதன் மூலமாக மட்டும் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் வருவாய் ஈட்டி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications