ஜல்லிகட்டில் விதிமீறல்கள் இருக்காது! உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!
டெல்லி : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிகட்டி போட்டிகள் எப்படி நடக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்களே ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை எதிர்பார்த்து வரும் நிலையில் தமிழகத்தின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்டா 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு
விசாரணையின் போது விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களோடு, புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் தடைகோரிய அமைப்புகளிடம், திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது. அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும் இல்லை என்றாலும் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது.

பீட்டா
அதை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எவை உள்ளது? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும் தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்டவை எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிகட்டி போட்டிகள் எப்படி நடக்கும் என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண பத்திரம்
அதில்,"ஜல்லிக்கட்டு என்பது மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்த பின்னரே நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வர். மாடுபிடி வீரர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், உரிய தகுதி சான்றிதழ் சமர்பித்த பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். காளைகளை உரிய விலங்கு மருத்துவர் பரிசோதிப்பர்.

விதிமீறல்கள் இல்லை
ஒன்றுக்கு மேற்பட்டோர் காளையை அடக்க முற்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். காளை அரங்கினுள் இருந்து வெளியேறவில்லை என்றால் காளையின் உரிமையாளரை அழைத்து அதனை வெளியேற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுவர். காளைகள் 15 மீட்டர் நீள ஜல்லிக்கட்டு அரங்கை தாண்டினால், காளையை பிடித்து செல்ல நீண்ட பாதை உள்ளது. அந்த பகுதியில் காளையின் உரிமையாளர் அதனை பிடித்து செல்வர். அங்கிருந்து காளைகளை அழைத்து சென்று அதற்கு உரிய தண்ணீர், உணவு, ஓய்வு வழங்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்வர்

கட்டுப்பாடுகள்
குறைந்தது 18 மாதம் வயதான காளைகளே ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். காளைகளுக்கு சாராயம், மது, கண்களில் மிளகாய் பொடி தூவுதல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சட்ட விரோத செயல்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 50 சதுரமீட்டர் கொண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு காளை மட்டுமே அவிழ்த்து விடப்படும். வாடிவாசலில் இருபுறம் மட்டுமே வீரர்கள் நிற்பர், காளை வரும் பாதையை மறைத்து எவரும் நிற்கமாட்டார். ஒரு சுற்றுக்கு, 25 வீரர்கள் மட்டுமே அரங்கிற்குள் காளையை அடக்க அனுமதிக்கப்படுவர்" என்பன உள்ளிட்ட பல விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications