தீவிரமாக பரவுதே.. இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வந்தால் RT-PCR டெஸ்ட் எடுக்கணுமா? தமிழ்நாடு அரசு அட்வைஸ்

சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ப்ளூ காய்ச்சல் நாடு முழுக்க தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை இது தொடர்பாக முக்கியமான அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே, முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது.

இதன் அறிகுறிகள் என்னவென்று இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டிலும் இந்த கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக பேருக்கு இந்த ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ப்ளூ காய்ச்சல் பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. அதன்படி மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் இன்ஃப்ளூயன்சாவுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யலாம். மற்ற நேரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ப்ளூ காய்ச்சல்

ப்ளூ காய்ச்சல்

ப்ளூ தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ப்ளூ தடுப்பூசியை இணைநோய் உள்ளோரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் மக்கள் இந்த காய்ச்சல் வந்தால் வெளியே செல்ல கூடாது. மருத்துவமனைக்கு செல்வதை தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்ல கூடாது. முடிந்த அளவு அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையின்றி கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல கூடாது, என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

அறிவுரை

அறிவுரை

H3N2 வைரஸ் இன்ப்ளுயன்சா காய்ச்சல் மட்டும் நாடு முழுக்க அதிகாரபூர்வமாக 3,038 பேருக்கு ஏற்பட்டு உள்ளதாம். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் 1,245 கேஸ்கள், பிப்ரவரியில் 1307 கேஸ்கள், மார்ச்சில் இதுவரை 486 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். தமிழ்நாட்டில்தான் இதில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் 545 கேஸ்கள் பதிவாகி இருக்கிறதாம். மகாராஷ்டிராவில் 170 கேஸ்கள் பதிவாகி உள்ளன. குஜராத்தில் 42 கேஸ்கள் பதிவாகி உள்ளன. பஞ்சாபில் 28 கேஸ்கள் பதிவாகி உள்ளன.

காய்ச்சல்

காய்ச்சல்

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பாக நாடு முழுக்க உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ப்ளூ காய்ச்சல் குறித்த எச்சரிக்கை இதில் விடுக்கப்பட்டுள்ளது. அதில் ப்ளூ காய்ச்சல் பரவலை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநில அரசுகள் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிவுரை

அறிவுரை

போதிய பெட் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல்கள் மற்றும் சில கடுமையான சுவாச பிரச்சனை பாதிப்புகள் நாடு முழுவதும் உள்ள சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா கேஸ்களும் உயர தொடங்கி உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் கேஸ்கள் சில மாநிலங்களில் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இந்த கேஸ்களை அரசு நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+