Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம்: இன்று தேர்தல் நடந்தால் திமுக அணி 38-39 இடங்கள்;அதிமுக, பாஜக சோலி முடியுமாம்- India Today

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியே 38 முதல் 39 இடங்களையும் கைப்பற்றும்; அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என
India Today-C Voter கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் India Today-C Voter கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது. இந்த கருத்து கணிப்பின் முக்கிய அம்சங்கள்:

tamilnadu dmk india today

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அணி 39 இடங்களையும் கைப்பற்றியது. அத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைத்தன.

2024-ம் ஆண்டு தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத அதிமுகவுக்கு 23% வாக்குகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18% வாக்குகளும் கிடைத்தன.

தற்போது லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் நடந்தால் திமுக அணியே 38 முதல் 39 இடங்களிலும் வெற்றி பெறும். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

tamilnadu dmk india today

மேலும் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 2024-ம் ஆண்டு தேர்தலை விட 5% அதிகரித்து 52% ஆக உயரும்; அதிமுக அணியின் வாக்கு சதவீதம் 3% குறைந்து 18% ஆகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% அதிகரித்து 21% ஆகவும் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் திமுக அணிக்கு அடுத்ததாக 2-வது பெரிய கட்சியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னேறும்; 3-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும்.

தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 343 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்களும் கிடைக்கும். 2024-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூட்டணிக்கு 44 இடங்கள் கூடுதலாகவும் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் குறைவாகவும் கிடைக்கும்.

இவ்வாறு India Today-C Voter கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+