டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடரின் 2-வது நாளான இன்று தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் முழக்கங்களுடன் பதவியேற்றனர். 2019 லோக்சபா பதவியேற்பின் போது பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க என முழக்கமிட்டனர் திமுக கூட்டணி எம்பிக்கள். அதற்கு பதிலாக ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பாஜக தரப்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Jun 25, 2024, 3:04 pm IST
தமிழகத்தின் 39 எம்பிக்களும் பதவியேற்றனர்.
Jun 25, 2024, 3:04 pm IST
விஜய் வசந்த் எம்பி காமராஜர்- ராஜீவ்காந்தி வாழ்க என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 3:02 pm IST
காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் எம்பி தமிழில் பதவியேற்றார்.
Jun 25, 2024, 3:02 pm IST
தென்காசி டாக்டர் ராணி ஶ்ரீகுமார் பதவியேற்றார். கனிமொழி. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வாழ்க என முழக்கமிட்டார் ராணிஶ்ரீகுமார்.
Jun 25, 2024, 3:00 pm IST
கனிமொழி கருணாநிதி எம்பி தமிழில் பதவியேற்றார். எந்த முழக்கத்தையும் கனிமொழி எழுப்பவில்லை.
இந்திய அரசியலமைப்பு வாழ்க! ஜெய்ஹிந்த் என காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:57 pm IST
தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எந்த முழக்கமும் எழுப்பவில்லை ஆனால்
சட்டப்பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை சபையில் எடுத்து காட்டினார்
Jun 25, 2024, 2:56 pm IST
தமிழ் வாழ்க! மார்க்சியம் வெல்க என முழக்கமிட்டார் மதுரை சு.வெங்கடேசன் எம்பி.
Jun 25, 2024, 2:55 pm IST
கார்த்தி சிதம்பரம் எம்பி கடவுளறிய உறுதியேற்றுக் கொண்டார்
Jun 25, 2024, 2:54 pm IST
முரசொலி எம்பி தமிழில் பதவியேற்றார். அப்போது கருணாநிதி- ஸ்டாலின்- உதயநிதி வாழ்க என்றார். காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:53 pm IST
சிபிஐ எம்பி நாகை செல்வராஜ் மார்க்சியம் வெல்க என முழங்கினார்
Jun 25, 2024, 2:51 pm IST
காங்கிரஸ் எம்பி சுதா, தமிழ் கடவுள் முருகப் பெருமான் மீது உளமாற உறுதி கூறுகிறேன் என்றார். ராகுல் காந்தியை வாழ்த்தி முழக்கமிட்ட சுதா, ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ எனவும் முழங்கினார்
Jun 25, 2024, 2:50 pm IST
விசிக தலைவர் தொல்.திருமாவளவன், உளமார உறுதியேற்கிறேன்; ஜெய் டெமாக்கரசி! ஜெய் கான்ஸ்டிடியூசன் என முழங்கினார் திருமாவளவன்
Jun 25, 2024, 2:48 pm IST
காங்கிரஸ் எம்பி டாக்டர் விஷ்ணுபிரசாத் கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்றார்
Jun 25, 2024, 2:47 pm IST
கரூர் எம்பி ஜோதிமணி பதவியேற்றார்
Jun 25, 2024, 2:47 pm IST
அருண்நேரு எம்பி தமிழில் பதவியேற்றார்.
Jun 25, 2024, 2:46 pm IST
மதிமுக எம்பி துரைவைகோ, சமூகநீதி- சமத்துவம்- மனிதநேயம் வாழ்க- பரவட்டும் என கைகளை உயர்த்தி தந்தை வைகோவைப் போல முழகக்மிட்டார்
Jun 25, 2024, 2:46 pm IST
திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வெல்க மார்க்சியம் என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:42 pm IST
பொள்ளாச்சி ஈஸ்வரசாமி தமிழில் பதவியேற்றார். பின்னர் பெரியார்- அண்ணா- கருணாநிதி-ஸ்டாலின் - உதயநிதியை வாழ்த்தி முழக்கமிட்டார். எதிர்காலம் சின்னவர் என உதயநிதியை குறிப்பிட்டார்.
Jun 25, 2024, 2:41 pm IST
கோவை கணபதி ராஜ்குமார் வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி வாழ்க! உழைத்த தொண்டர்கள்- பெற்ற அன்னை குடும்பத்தாருக்கும் நன்றி என்றார்
Jun 25, 2024, 2:40 pm IST
டிஆர் பாலு, ஆ.ராசா தமிழில் பதவியேற்ற பின்னர், முழக்கங்கள் எழுப்பவில்லை
Jun 25, 2024, 2:39 pm IST
சிபிஐ எம்பி சுப்பராயன் தமிழில் பதவியேற்றார். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றதமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:38 pm IST
ஈரோடு திமுக எம்பியும் கருணாநிதி, ஸ்டாலின் , உதயநிதியை வாழ்த்தி முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:36 pm IST
தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உறுதி மொழியை வாசித்தார். பின்னர் கோவை செழியன்- கரூர் முத்துகவுண்டர் புகழ் - ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:35 pm IST
திமுக எம்பி டிஎம் செல்வகணபதி பதவியேற்ற பின் வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு; கருணாநிதி-ஸ்டாலின் - வருங்கால தமிழ்கம் உதயநிதி வாழ்க என முழங்கினார்
Jun 25, 2024, 2:35 pm IST
திமுக எம்பி மலையரசனும் கருணாநிதி- தளபதி-ஸ்டாலின் -எவ வேலு வாழ்க என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:32 pm IST
விசிக எம்பி ரவிக்குமார் தமிழில் பதவியேற்றார். பின்னர் வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம்- சமூகநீதி வெல்க என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:31 pm IST
ஆரணி எம்பி தரணிவேந்தன், கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்
Jun 25, 2024, 2:30 pm IST
திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார். வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உத்யநிதி - பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் அண்ணாதுரை
READ MORE
12:41 PM, 25 Jun
தமிழகத்தின் 39 எம்பிக்களும் லோக்சபாவில் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
1:01 PM, 25 Jun
ராஜஸ்தான் எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். சிக்கிமைத் தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்கள் பதவியேற்பர்
1:03 PM, 25 Jun
பதவிப் பிரமாண வாசகங்களை தவிர எம்பிக்கள் எழுப்பும் முழக்கங்கள் சபைக் குறிப்பில் இடம் பெறாது என தற்காலிக சபாநாயகர் தெரிவித்தார். ஆனாலும் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
1:07 PM, 25 Jun
லோக்சபா தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங் எம்பிக்களுக்கு பதவியேற்பு செய்து வைக்கிறார்
உணவு இடைவேளைக்குப் பின் 2.15 மணிக்கு லோக்சபா கூடுகிறது
2:17 PM, 25 Jun
தமிழ்நாடு எம்பிக்கள் பதவியேற்க தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங் அழைப்பு விடுத்தார்
2:17 PM, 25 Jun
தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் நிலையில் லோக்சபாவில் திடீர் அமளி
2:18 PM, 25 Jun
திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில்
2:20 PM, 25 Jun
திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க!
திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார்
2:21 PM, 25 Jun
தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் பதவியேற்று வளர்க முத்தழிறிஞர் புகழ்! வாழ்க தளபதி! வாழ்க தமிழ்த் திருநாடு என முழக்கமிட்டார்
2:23 PM, 25 Jun
திமுக எம்பி தயாநிதி மாறன், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார்
2:23 PM, 25 Jun
திமுக எம்பி செல்வம் பெரியார் அண்ணா , கலைஞர், ஸ்டாலின், உதயநிதி வாழ்க என முழக்கமிட்டார்
2:25 PM, 25 Jun
திமுக லோக்சபா குழு தலைவர் டிஆர்பாலு தமிழில் பதவியேற்றார்.
2:26 PM, 25 Jun
தமிழில் பதவியேற்ற பின்னர் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க என முழக்கமிட்டார் ஜெகத்ரட்சகன்
2:28 PM, 25 Jun
தமிழக எம்பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார் ஜெய் தமிழ்நாடு என முழங்கினார்
2:28 PM, 25 Jun
தாய் தந்தைக்கு வணக்கம்! வெல்க தமிழ்நாடு! வாழ்க தளபதி! வருங்கால எங்கள் உதயநிதி என முழக்கமிட்டார் கதிர் ஆனந்த் எம்பி
2:29 PM, 25 Jun
தருமபுரி எம்பி மணி பதவியேற்ற பின்னர் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டார்
2:30 PM, 25 Jun
திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார். வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உத்யநிதி - பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் அண்ணாதுரை
2:31 PM, 25 Jun
ஆரணி எம்பி தரணிவேந்தன், கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்
2:32 PM, 25 Jun
விசிக எம்பி ரவிக்குமார் தமிழில் பதவியேற்றார். பின்னர் வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம்- சமூகநீதி வெல்க என முழக்கமிட்டார்
2:35 PM, 25 Jun
திமுக எம்பி மலையரசனும் கருணாநிதி- தளபதி-ஸ்டாலின் -எவ வேலு வாழ்க என முழக்கமிட்டார்
2:35 PM, 25 Jun
திமுக எம்பி டிஎம் செல்வகணபதி பதவியேற்ற பின் வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு; கருணாநிதி-ஸ்டாலின் - வருங்கால தமிழ்கம் உதயநிதி வாழ்க என முழங்கினார்
2:36 PM, 25 Jun
தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உறுதி மொழியை வாசித்தார். பின்னர் கோவை செழியன்- கரூர் முத்துகவுண்டர் புகழ் - ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார்
2:38 PM, 25 Jun
ஈரோடு திமுக எம்பியும் கருணாநிதி, ஸ்டாலின் , உதயநிதியை வாழ்த்தி முழக்கமிட்டார்
2:39 PM, 25 Jun
சிபிஐ எம்பி சுப்பராயன் தமிழில் பதவியேற்றார். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றதமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு என முழக்கமிட்டார்
2:40 PM, 25 Jun
டிஆர் பாலு, ஆ.ராசா தமிழில் பதவியேற்ற பின்னர், முழக்கங்கள் எழுப்பவில்லை
2:41 PM, 25 Jun
கோவை கணபதி ராஜ்குமார் வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி வாழ்க! உழைத்த தொண்டர்கள்- பெற்ற அன்னை குடும்பத்தாருக்கும் நன்றி என்றார்
2:42 PM, 25 Jun
பொள்ளாச்சி ஈஸ்வரசாமி தமிழில் பதவியேற்றார். பின்னர் பெரியார்- அண்ணா- கருணாநிதி-ஸ்டாலின் - உதயநிதியை வாழ்த்தி முழக்கமிட்டார். எதிர்காலம் சின்னவர் என உதயநிதியை குறிப்பிட்டார்.
2:46 PM, 25 Jun
திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வெல்க மார்க்சியம் என முழக்கமிட்டார்
TN Lok Sabha MP's Swaering-in-Ceremony (தமிழக லோக்சபா எம்பிக்கள் பதவியேற்பு) LIVE News in Tamil: தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதி எம்பிக்களும் இன்று பதவியேற்கின்றனர்.