தொகுதி மறுவரையறை குறித்த டி சர்ட் அணிந்து லோக்சபாவுக்குள் வர தமிழக எம்பிக்களுக்கு சபாநாயகர் தடை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகளுடனான டி சர்ட் அணிந்து தமிழ்நாட்டு எம்பிக்கள் லோக்சபாவுக்குள் நுழைவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த தடை உத்தரவுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு நியாயமான உறுதி மொழியைத் தரும் வரையில் போராட்டத்தைத் தொடருவோம் என்றும் கனிமொழி அறிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications