இந்தியாவிலேயே மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடம்- மத்திய அமைச்சர் ஜேபி நட்டா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளதாகவும் மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக மருத்துவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்தார். நாட்டில் மிகக் குறைவான மருத்துவர்கள் உள்ள மாநிலம் மிசோரம் என்றும் அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜேபி நட்டா கூறியதாவது:

parliament health tamilnadu parliament health tamilnadu

- இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் உள்ளது

- இந்தியாவின் தேசிய மருத்துவ கவுன்சிலில் 13,86,145 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர்.

- ஆயுஷ் மருத்துவர்கள் எண்ணிக்கை 6,14,000.

- 2014-ல் மொத்தம் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்த நிலைமை மாறி இப்போது 780 ஆக உள்ளது.

-2014-ம் ஆண்டு 51,348 மருத்துவ படிப்பு இடங்கள் இருந்தன.

- நாட்டில் தற்போது 1,18,137 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.

- முதுநிலை மருத்துவர் படிப்பு இடங்கள் 3,185 ஆக இருந்தது. இது தற்போது 73,157 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

- மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 2,09,540 மருத்துவர்கள் உள்ளனர்.

- 2-வதாக தமிழ்நாட்டில் 1,49,399 மருத்துவர்கள் உள்ளனர்.

- 3-வதாக கர்­நா­ட­காவில் 1, 41, 155 மருத்துவர்கள் இருக்கின்றனர்.

- மிகக் குறைவாக மி­சோ­ரம் மாநி­லத்­தில் 156 மருத்துவர்கள், நாகா­லாந்தில் 166 மருத்துவர்கள் உள்ளனர்.

- ஆந்­திராவில் 1,05,805; பீகார் மாநிலத்தில் 48,200; சத்தீஸ்கரில் 10,962; டெல்லியில் 31,481; கோவாவில் 4,720, குஜ­ராத்தில் 79,169 மருத்துவர்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+