டெல்லியில் தமிழ்நாட்டின் தரமான சம்பவம்.. கம்பீரமாக வந்த குடவோலை முறை அலங்கார ஊர்தி.. அறிய வேண்டியவை
டெல்லி: டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது. கம்பீரமாக தமிழ் மொழியில் குடவோலை முறை குறித்த பாடல்களுடன், பாரம்பரிய முறைப்படியான வடிவமைப்புடன் இருந்த குடவோலை முறை அலங்காரம் பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது.
இன்று 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடக்கிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

காலை 10.30 மணி அளவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையிலான போர் விமானங்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டது. குடியரசு தலைவர் முர்மு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கம்பீரமாக தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்தபடி வந்த அலங்கார ஊர்தி கை தட்டி வரவேற்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. பலரும் கைதட்டி ஊர்தியை வரவேற்றார்கள்.
இந்த முறை குடவோலை முறை என்பது மக்களாட்சி நடைபெறுவதற்கு அச்சாரம் போட்டது ஆகும். குடவோலை என்பது தமிழ்நாட்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறையாகும். இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதி போடுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு சிறு குழந்தைகளை வைத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் மட்டுமே தேர்தலில் நிற்கச் செய்து தேர்தல் நடந்திருக்கிறது.

இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகளும் உள்ளன.
இதில் இரண்டு கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்திருக்கின்றன. குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதி மிகக் கடுமையான விதிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டதை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் கல்வெட்டின்படி வேட்பாளராகத் தகுதி உடையவர்
கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவர்
தனது மனையிலேயே அகம் எடுத்துக்கொண்டுள்ளவர்.
வயது வரம்பு : 70 வயதிற்குக் கீழே 35 வயதிற்கு மேலே
மந்திர பிராம்மணம் வல்லான்
ஓதுவித்தறிவான் அல்லது அரைக்கால் நிலே உடையான் எனினும் ஒரு வேதம் வல்லான்
அவர்களிலும் காரியத்தில் நிபுணனாக இருக்க வேண்டும்
ஆசாரம் உடையான்
பொருள் சுத்தம் மனச் சுத்தம் உடையான்...

உத்திரமேரூர் கல்வெட்டின்படி வேட்பாளராகத் தகுதி அற்றோர் (உத்திரமேரூர் கல்வெட்டின்படி)
வாரியங்களுக்குக் கணக்கு காட்டாது இருந்தவன் (மற்றும் இவனுக்கு சிற்றவை, பேரவை மக்கள், அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன்பிறந்தான், தந்தையோடு உடன் பிறந்தான், உடன் பிறந்தான், பிள்ளை கொடுத்த மாமன், ..என்று பல உறவு முறையிலும் தொடர்பிலும் வருவோரும் தகுதி இழக்கின்றனர்)
கையூட்டு செய்தவன்
பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனவன்
பிறரின் பொருள் பறித்தோன்.. மற்றும் பல
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications