டெல்லி அதிரடியில் தமிழச்சி தங்கபாண்டியனும் இணைந்தார்.. என்ன செய்வார் பியூஷ் கோயல்?
டெல்லி: தனது தொகுதி இப்பிரச்சினை தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் திமுக தென் சென்னை தொகுதி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.. இதையடுத்து பலம் கொண்ட எதிர்க்கட்சி குழுவாக அந்தக் கூட்டணி உருவாகியுள்ளது.

லோக்சபா கூட்டதொடர் ஆரம்பித்த உடனேயே திமுக எம்பிக்கள் அதிரடியை ஆரம்பித்துவிட்டனர். மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசி தினசரி ஏதாவது ஒரு செய்தியில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றனர்.
தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட சீனியர்கள் வரிசையில் முதல் முறையாக எம்பி ஆகியுள்ள தமிழச்சி தங்கபாண்டியனும் சேர்ந்துள்ளார். இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இது குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் சொல்வதை கேளுங்கள்.
தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 'வேளச்சேரி - பரங்கிமலை' வழித்தடத்தில் 'சென்னை பெருந்திரள் விரைவு அமைப்பு (Chennai MRTS)' திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவன செய்யும்படி மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களை இன்று (ஜூலை 02.2019) சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழச்சி தங்க பாண்டியன் கோரிக்கையை தொடர்ந்து என்ன செய்வார் பியூஷ் கோயல் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications